பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8

என்னும் பாடலை எழுதித் தந்துவிட்டுச் சென்றார்.பாடலி புர நாதன் என்பது திருப்பாதிரிப் புலியூர்ச் சிவனைக் குறிக்கும்.

 மறுநாள் ஆசிரியர் சுவாமி நாதர் வந்தார். அடிகளார் பாட்டுக்குச் சீர்தளை பிரித்து எழுதிவைத்திருந்த தாளில் ஒரு பத்து ரூபா (currency) தாளையும் வைத்துக் கொடுத்தார். அப்போதைய பத்து ரூபா என்பது, இப் போதைய முந்நூறு ரூபாவுக்கு நிகர் எனலாம். பெற்ற ஐயர் அடிகளாரை நோக்கி, 'ஏதோ நான் பாட்டுக்கு எழுதி வைத்தேன்- நீங்கள் பணம் தந்துள்ளீர்களே' என்று கூறினராம். அதற்கு அடிகளார், நான்பாட்டுக்கு ஏதோ தந்தேன்’ என்றாராம். இங்கே பாட்டு என்பது, செய்யுள் என்ற பொருளிலும், மனம்போன போக்கு என்ற பொருளிலும் இன்புறுத்துவதை அறியலாம். 

ஆசிரியர்பால் அன்பு:

 ஆசிரியர்பால் அன்பு (குருபக்தி) கொண்ட அடிகளார் தமது அருளக நூல் நிலையத்திற்குச் சுவாமிநாத நூலகம் எனப் பெயரிட்டார். ஆசிரியரின் மகன் முத்துகிருஷ்ணனை பி.ஏ. (B.A.)வரையிலும் செலவு செய்து படிக்கவைத்தார். இதிலிருந்து, அடிகளாரின் நன்றியுணர்வை அறியலாம். 

அருள் பணிகள்:

 பரந்த அளவில் கல்வி பயின்று பெரும் புலமை பெற்ற அடிகளார், தமது நேரம் முழுவதையும் நூல் ஆராய்ச்சியி லும், சொற்பொழிவு ஆற்றுவதிலும், மாணாக்கர்க்குப் பாடம் சொல்வதிலும், சிறந்த உரையாடலிலும் செலவிட்டு வந்தார்.
 கடல் நீரை முகந்து கறுத்துத் திரண்ட முகிலினம் பெருமழை பொழிவது போன்று, சிறக்கக் கற்றுத் தெளிந்த அடிகளார் கருத்துச் செறிந்த சொல்மழை பொழியத்