பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26

(Palace Theatre) என்னும் திரையோவியக் கொட்டகையில் சைவ சித்தாந்த மகா சமாசத்தின் சிறப்புக் கூட்டத் திற்குத் தலைமை தாங்கி நடத்தினார். ‘சித்தாந்தம்’ என்னும் திங்கள் இதழ் நடத்தவேண்டும் என அடிகளார் அறிவித்து, முதல் இதழுக்கு வேண்டிய பொருள் உதவி யைத் தாமே புரிந்தார். 1928-சனவரியில் முதல் இதழ் வெளிவந்து அடிகளாரை மகிழ்வித்தது.

 1927-டிசம்பரில், புதுச்சேரியில், புதுச்சேரி கிரந்தே - சிவசங்கர செட்டியார், பூரணாங் குப்பம் முனிசாமிப் பிள்ளை ஆகியோரின் பொருள் உதவிகொண்டு, சைவ சித்தாந்த மகா சமாசத்தின் இருபத்திரண்டாவது மாநாடு அடிகளாரின் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
 அஞ்ஞான்று, அடிகளார் புதுவை அம்பலத்தாடையர் மடாலயம் போந்து, ஆங்கிருந்த அடிகளாரோடு அளவளாவிச் சென்றார்.

உயிர்ப் பலி நிறுத்தம்:

 அடிகளார் கொங்கு நாட்டுப் பயணத்தின் போது சேந்த் மங்கலம் (கொங்குநாடு என்னும் ஊரை அடைந்தார். ஆங்கிருந்த அறிஞர் பெருமக்கள் அடிகளாரை அன்புடன் வரவேற்றனர். அவ்வூரில் 1925 - ஏப்ரலில் பார்க்கவ குலச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழா அடிக ளாரின் தலைமையில் நடைபெற்றது. திரு.வி.க., ம.ரா. குமாரசாமிப் பிள்ளை முதலியோர் சொற் பொழிவாற்றி னர். அங்குப் பேசிய இராம. சபசோப ஐயங்காருடன் இன்னொருவர் கருத்து மோதல் செய்தார். அடிகளார் தமது உரையில் இருவர் கருத்துகளையும் பற்றிக் குறிப்பிட்டு அமைதி நிலவச் செய்தார்.