பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



28

திருக்கோயிலில் தொடர்ந்து. இருபத்திரண்டு நாட்கள் அடிகளார் சொல் வெள்ளம் பெருக் கெடுக்கச் செய்தார்.

சைவப் பெரியார் மாநாடு:

 1929-மே - திங்களில் தம் புலிசை அருளகத்தில் அடிகளார் சைவப் பெரியார் மாநாடு கூட்டி நடத்தினார். மாநாட்டிற்கு மறைமலை அடிகளார் தலைமை தாங்கி னார். பல்வேறிடங்களிலிருந்தும் சைவப் பெரியார்கள் வந்து குழுமியிருந்தனர். அம்மாநாடு ஐந்து நாட்கள் காலை மாலை இரு வேளையும் நடைபெற்றது. அம் மாநாட்டின் விளைவாக, சைவ சித்தாந்த மகா சமாசம் பன்னிரண்டு திருமுறைகளையும் பதினான்கு சித்தாந்த சாத்திரங்களையும் மேலும் பல நூல்களையும் தூய்மை யாக வெளியிட்டது. 'சைவப் பஞ்சாங்கம்’ என ஒரு பஞ் சாங்கம் வெளியிடும் டாக்டர் இ.மு. சுப்பிரமணிய பிள்ளைக்கு, மேலும் ஊக்குவிக்க நூறு வெண்பொற் காசு பரிசாக அளிக்கப்பெற்றது.

திருவெண்ணெய் நல்லூர்:

 1929-டிசம்பரில் சைவ சித்தாந்த மகா சமாசத்தின் இருபத்து நான்காம் மாநாடு, திருவெண்ணெய் நல்லூரில் உள்ள 'திருவருள் துறை' என்னும் சிவன் கோயிலில் அடிக ளார் தலைமையில் மூன்று நாட்கள் வெற்றியுடன் நடை பெற்றது. இது அப்பகுதியைச் சேர்ந்த சின்னசாமி ரெட்டி யாரின் பெரு முயற்சியால் நடைபெற்றது. இம்மாநாட்டிற் குத் திருவாவடுதுறை ஆதீனத்து அடிகளார் தம் பேராளரை அனுப்பியதோடு சில சிறப்புகளும் (மரியாதைகளும்) செய்ய வைத்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.

தியாகர் வில்லா: சென்னை த.ப. இராமசாமிப் பிள்ளை அடிகளாரைச்