பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



41

சாமியார் எளிய உடையுடன் எளிமையாய்க் காணப்பட்டார், இளைஞன் அவரை அணுகி, நான் ஞானியார் அடிகளாரைப் பார்க்க வேண்டும் என்றான். எதற்கு என்று அந்தச் சாமியார் கேட்டார். அவன் வந்த காரணத்தைத் தெரிவித்தான். உடனே சாமியார் நான் சொல்லித் தருகி றேன் என்று கூறி, அவனது பாட நூலிலுள்ள சில பாடல் களை விளக்கிக் கற்பித்து, நாளைக்கு இதே நேரத்தில் வா என்று சொல்லி அனுப்பி விட்டார்.

 இளைஞனுக்கு மனநிறைவு ஏற்பட வில்லை. ஞானி யார் சுவாமிகளிடம் பாடம் கேட்க வந்தோமே இவர் யாரோ ஒரு சாதாரண சாமியார் நம்மை மடக்கி அனுப்பி விட்டாரே என்ற ஏமாற்றத்துடன் சென்று, திருஞான சம்பந்தம் பிள்ளையிடம் நடந்ததைத் தெரிவித்தான். அவர், சாமியாரின் உருவத் தோற்றத்தைப் பற்றி அவனி டம் விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவர்தான் ஞானியார் சுவாமிகள் - நீ நாளைக்கும் செல்வாயாக என்று கூறி அனுப்பினார்.
 இளைஞன் மறுநாள் குறித்த நேரத்தில் ஞானியார் அருளகத்தை அடைந்தான். அடிகளாரைக் கண்டதும், உங்களை இன்னார் என்று யான் நேற்று அறியவில்லை; மடாதிபதிகள் ஆடம்பரத் தோற்றத்துடன் இருப்பார்கள்அவர்களை எளிதில் பார்க்க முடியாது என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன் - ஆனால் உங்கள் எளிமை என்னைக் கவர்ந்துவிட்டது என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதான். பின்னர் அடிகளார் அவனுக்கு ஆறுதல் கூறிப் பாடம் கற்பித்தார். திருஞான சம்பந்தர்க்கு உமா தேவியார் ஞானப்பால் ஊட்டியது போல, திருஞான சம்பந்தர் அனுப்பிய முசுலீம் இளைஞனுக்கு அடிகளார் தமிழ்ப் பால் ஊட்டினார். ஞானப்பால் உண்டதும் ஞான