பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சம்பந்தர் 'தோடுடைய செவியன்’ எனப் பாடல் பாடியது போல, அடிகளாரின்தமிழ்ப் பால் அருந்தியதால் இளைஞன் அடுத்த தேர்வில் வெற்றி பெற்றான். இந்த நிகழ்ச்சி மிகவும் சுவையாக உள்ளதல்லவா? சிங்கப்பூர்த் துறவி

 சிங்கப்பூரிலிருந்து துறவி யொருவர் புலிசைக்கு வந்து தங்கி மற்ற மாணாக்கர்களுடன் பாடம் கேட்டு வந்தார். பாடம் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் அடிகளார் நீராடிச் சிவ பூசனை முடித்தே கற்பிக்க வருவார். சிங்கப்பூர்த் துறவியும் நீராடிச் சிவபூசனை முடித்து வருவார். ஒருநாள் சிங்கப்பூர்த் துறவி நீராடிச் சிவபூசனை முடிக்காமல் வந்து விட்டார். பாடத் தொடக்கத்தில் அடிகளார் அனைவருக்கும் திருநீறு அளிப்பார். என்று சிங்கப்பூர்த் துறவிக்குத் திருநீறு அளிக்கக்கையை நீட்டிய போது, துறவி குளிக்காமல் - பூசனை முடிக்காமல் வந்த தால் திருநீறு பெறத் தயங்கினார். அதனைத் தம் அகஉணர்வால் உணர்ந்த அடிகளார், 'உடல் நலம் இல்லை போலும் - இருக்கட்டும் - திருநீறே நம்மைத் தூய்மைப் படுத்திவிடும் - இது போதும்' என்று கூறி, சிங்கப்பூர்த் துறவியின் நெற்றியில் தாமே தம் கையாலேயே திரு நீற்றைப் பூசினார்.
 மற்றும் சென்ற ஊர்களில் எல்லாம் - இடங் களில் எல்லாம், பொருள் பெறாமல், இலவசமாக, வருவோர் யாவர்க்கும் அன்புடன் பாடம் கற்பித்தவர் ஒருவர் இருந்தார் என்றால்.அவர் ஞானியார் அடிகளாரே யாவார்.

சொற் பொழிவு

 இந் நூல் முழுதும் அடிகளாரின் சொற்பொழிவுத்திறன் பேசப்பட்டுள்ளது. மற்றவருடன் உரையாடும் போதே