பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



v

நூற்று இருபத்து ஐந்தாவது ஆண்டு விழாவால் அவர்களது வாழ்க்கை வரலாற்றை வெளியிடும்பேறு பெற்றதில் கழி பேருவகை கொள்கிறோம்.

 நாடும், மொழியும் வாழ உழைத்த பெருமக்களை இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் இந்த வாழ்க்கை வரலாற்று வரிசை வெளிவருகிறது. செயற்கரிய செய்த சான்றோர்களின் சாதனை களைப் புதிய தமிழில் இளைஞர் சமுதாயத்திற்கு இனம் காட்டும் வரிசை இது. 

 இந்நூலை உருவாக்கிய பெருமகனார் ஞானியார் அடி களின் நன்மாணாக்கர் சுந்தர சண்முகனார். ஆராய்ச்சி நூல் படைப்பதில் வல்லவர்.பெருநூல்களை உருவாக்குவது அவருக்குக் கைவந்த கலை. மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பேரவைச் செம்மல். தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றவர். கற்றல், சிந்தித்தல், தெளிதல் எழுதுதல் இவருடைய வாழ்க்கை நெறியாகும்.
 தன் ஆசிரியப் பெருமானைப் பற்றி அரிய வரலாற்று நூலைப் பக்தி சிரத்தையுடன் படைத்து அளித்துள்ளார்.
 மணிவாசகர் பதிப்பகத்தின் ஒவ்வொரு நூலும், தமிழ் நலம் கருதியும், தமிழர் நலம் கருதியும் வெளியிடப்படும் ஆய்வு நூல் என்பது தமிழறிஞர் மதிப்பீடு. இன்னும் அரிய பெரிய பணிகளில் எங்களை நன்னெறிப்படுத்தும்படி தமிழ்த் தாயை வாழ்த்தி வணங்குகிறோம்