பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

இடமாகக் கொண்ட சைவ சித்தாந்த மகா சமாசத்தினர், சமாசத்தின் முப்பத்தாறாம் ஆண்டு மாநாட்டைத் திருச் சிராப்பள்ளியில் நடத்தத் தீர்மானித்து. தலைமை ஏற்று நடத்தித்தர அடிகளாரை வேண்டினர். திருவண்ணாமலை யிலிருந்து திருக்கோவலூரில் வந்து தங்கியிருந்த அடிகளார் திரிசிராப்பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்லலானார். வழி யில் உள்ள பெண்ணாகடம் முதலிய பல ஊர்களில் அன்பர் களின் வேண்டுகோட்கு இணங்கிச்சொற்பொழிவு அருளிக் கொண்டே சென்று திரிசிரபுரம் எய்தினர். அன்பர்களின் வரவேற்புச் சிறப்புக்கு அளவே இல்லை.

1941 டிசம்பர் 25 ஆம்நாள் முதல் மூன்று நாட்கள் அடிகளாரின் தலைமையில் மாநாடு நடைபெற்றுப் புகழ் எய்தியது. அறிஞர்கள் சொற்பொழிவுகட்குக் குறைவா என்ன? அடிகளாரின் உரை முடி மணியாய்ப் பொலிந்து விளங்கியது. மலைக்கோட்டை - தாயுமான சுவாமி திருக் கோயில் அரங்கம் விழாவால் பொலிவுற்றது.

அடுத்து திருச்சி மலைக்கோட்டைத் தெருவிலுள்ள சித்தாந்த சபையின் விழாவிலும் கலந்து கொண்டு சிறப் பித்தார் அடிகளார்.

இது 1941-மார்கழியில் நடைபெற்ழது. 1942-மார்கழி யில், திருச்சி தனுர்மாதத் திருப்புகழ் கோஷ்டியின் ஆண்டு விழாச் சொற்பொழிவிற்காக யான் சென்று அதே மலைக் கோட்டை - தாயுமான சுவாமித் திருக்கோயில் அரங்கத் தில், திருப்பராய்த்துறை சித்பவானந்த அடிகளின் தலைமை யில் முருகன் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது, தற்செயலாய்த் தலைநிமிர்த்தி எதிர்ச் சுவரைக் கண்டபோது, அதிலே ஞானியார் அடிக ளாரின் படம் மாலையிட்டு மாட்டப்பட்டிருந்ததைக் கண்டு கண் கலங்கினேன். இது நிற்க. -