பக்கம்:ஞான மாலை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:94 ஞான மாலே வருகிறது. அத்தகைய முருகனுக்குக் குறை கிரம் பிய பாமாலையைச் சூட்டலாமா? சாதாரணமான பாமாலை கூட அவனுக்குப் பொருத்தம் அன்று. எல்லா வகையிலும் சிறந்த பாமாலையை, எல்லா இலக்கணங்களும் குறைவற நிரம்பிய பாமாலையை, ஐந்து இலக்கணங்களிலைான செந்தமிழ் மாலையைச் சூட்டவேண்டும். இதனே நன்கு அறிந்த அருணகிரி யார் அத்தகைய மாலையை அணியவேண்டும் என்ற தம் ஆசையைக் காப்புச் செய்யுளில் தெரிவித்துக் கொள்கிரும். . சண்முகனுக்கு இயல்சேர், செஞ்சொல் புனை மாலை. இயல், இசை, நாடகம் என்று தமிழ் மூன்று வகைப்படும். அவற்றில் இயல் தமிழ் இந்தப் பாமாலை. இந்த இயல் தமிழ் ஐந்து இலக்கணங் களும் பொருந்தியதாக இருக்கவேண்டுமென்று விரும்புகிருர். இடும் நிலை முருகனைத் தலைவனுகக் கொண்டு அவன் புகழைச் சொல்லுகின்ற ஞானப் பாமாலையாகிய அநுபூதியை இறைவனுக்குச் சூட்டும்போது தம் முடைய கிலே இன்னபடி இருக்கவேண்டும் என்று அடுத்தபடியாக அருணகிரியார் சொல்கிருர், சிறந்து இடவே என்பது அந்தப் பகுதி. மாலே கன்ருக அமைந்து கைக்கு வந்தால் போதாது. அதனைச் சூட்டும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/112&oldid=855708" இலிருந்து மீள்விக்கப்பட்டது