பக்கம்:ஞான மாலை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சொற் புனே மாலை 95 துய கையோடும் மனத்தோடும் இருக்கவேண்டும். சிறந்த சுவையுள்ள உணவானுலும் கையும், வாயும் தூயனவாக இருந்தால்தான் அந்த உணவின் பயனைப் பெறலாம். அதுபோல, உயர்ந்த தலைவ னுக்கு உயர்ந்த பாமாலையைச் சூட்டும்போது தகுதி சிறந்திருக்கவேண்டும்; எல்லா வகையான தகுதிகளும் கிரம்பி இருக்கவேண்டும். எல்லாம் கிரம்பிய நிலையில் அந்தப் பாமாலையை இடவேண்டும். கவிஞர்கள் ஒருவகையான சங்கதம் வந்து கவி பாடுவார்கள் என்று சொல்வது உண்டு. கவிதா ஆவேசம் என்றும் அதைச் சொல்லலாம். அந்த மன நிலையை மூட் (Mood) என்று ஆங்கிலத்தில் சொல்வது உண்டு. கவிக்கு ஏற்ற மன நிலை (Poetic Mood) எப்போதும் புலவர்களுக்கு வராது. புல வனும் மனிதன் தானே? மற்ற மனிதனைப் போலச் சாதாரண எண்ணங்கள் அமைந்திருக்கும் காலம் பலவாக இருக்கும். சில சமயங்களில்தான் கவிஞ ளிைன் உணர்ச்சியும், ஆற்றலும் அவனிடத்தில் மலரும். பூச்செடியில் எப்போதுமே மலர் மலராது. சில சமயங்களில் வெறும் மொட்டுகளாக இருக்கும். பல சமயங்களில் ஒன்றும் இராது. மலர்வதற்கு ஒரு பக்குவம் வேண்டும். காலம் உண்டு. அதுபோலத் தான் கவிஞன் பாட்டுப் பாட வேண்டுமானுல் அதற்கு முன்னுல் அவனிடத்தில் உணர்ச்சி பிறக்கவேண்டும். உள்ளம் நிரம்பிய உணர்ச்சியினுல் கிறைந்து வெடித்து வருவதுதான் அருமையான பாடலாக அமையும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/113&oldid=855709" இலிருந்து மீள்விக்கப்பட்டது