பக்கம்:ஞான மாலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. முடைய அவல நிலையை மட்டும் அவர் சொல்லி யிருந்தால் இந்தத் தெளிவு நமக்கு உண்டாகாது. தாம் பெற்ற பல வகையான அநுபவங்களையும் வியப்போடும் பெருமிதத் தோடும் சொல்லும்போதுதான் நம்பிக்கையும், நாமும் முயன்று பெறவேண்டும் என்ற ஆசையும் கம்பால் எழுகின்றன. அருணகிரிநாதர் இயற்றிய நூல்களில் மற்ருெரு சிறப்பு உண்டு. அவர் மிகச் சிறந்த சமரச வாதி. தமக் கென்று வரையறையாக ஒன்றையும் மேற்கொள்ளாமல் எதுவானுலும் சரியென்று தலையை யாட்டும் போலிச் சமரச வாதியல்லர். முருகனை வாயாரப் பாடுவார்; அதற்காக மற்றத் தெய்வங்களை இழிவுபடுத்தமாட்டார். இராம. கிருஷ்ண பரமஹம்சர் சொல்வதுபோல, அருணகிரியா சாகிய கற்புக்கரசி முருகனவே காயகளுகக் கொண்டவள். மற்றத் தெய்வங்கள் யாவும் மரியாதையுடனும் அன்புட. அம் பழகும் புக்ககத்து உறவினர்கள். சிவபிரான் புகழும் 'உமாதேவியின் புகழும் பல இடங்களில் அவர் பாடல்களில் வரும்; அது வியப்பன்று: திருமாலுடைய புகழும் மிகச் சிறப்பாக அங்கங்கே விரவி வரும். இந்த மனப்பான்மையின் வளர்ச்சியே இந்த இருபதாம் நூற்ருண்டுக்குரியது. புரோம கிருஷ்ணரும் விவேகானந்தரும் மகாத்மா காந்தியும் சமரச பாவத்தையே வற்புறுத்தினர்கள். அருணகிரிநாதர் மிகப் பழங்காலத்திலேயே அதைச் சொன்னர். அருணகிரியார் பிரபுடதேவராயன் காலத்தில் வாழ்க் தவர் என்று திருப்புகழில் அவன் பெயரைக் குறிப்பிட் டிருப்பதால் தெரியவருகிறது. அவன் 15-ஆம் நூற் ருண்டின் இடையில் வாழ்ந்தவன். ஆதலில் அருணகிரியார் இற்றைக்கு ஐந்துாறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர் என்று புலனுகிறது. அக்காலத்தில் மக்கள் கண்டதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/12&oldid=855716" இலிருந்து மீள்விக்கப்பட்டது