பக்கம்:ஞான மாலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 முத்தி கிலே. இறைவன்பால் அன்பு உண்டாகி மற்றப் பொருள்களில் உள்ள பற்று மெல்ல மெல்லக் கழலும் போது கிலே உயர்ந்து வரும். அவ்வப்போது அந்த அந்த ேேலக்கு ஏற்ற மெய்ப்பாடுகள் உண்டாகும்; அநுபவம் நிலவும். இனிப்பின் அநுபவம் என்பது ஒன்றே என்று தோன்றிலுைம், மாம்பழத்தை உண்ணும்போது உண்டா கும் இனிப்பு அநுபவமும், பலாப்பழத்தை நுகர்கையில் உண்டாகும் அநுபவமும், வாழைக் கணியில்ை ஏற்படும் அநுபவமும், கற்கண்டு தேன் ஆகியவற்ருல் விளேயும் அநுபவமும் வெவ்வேருகவே இருக்கும். அப்படியே, பக்தி அநுபவமும் வரவர மேலோங்கி வரும். இப்படிப் பல கிலே கள் இருப்பதை அருள் வழியிலே செல்லுகிறவர்கள் சிறிதளவாவது உணரக்கூடும். அருணகிரியார் திருப்பாடல் களில் இந்த நிலைகள் பலவற்றைப் பார்க்கலாம். இறைவன் திருவுருள்ால் அவர் புலமை பெற்று அவன் புகழைப் பாடி அவன்பால் உபதேசம் பெற்று மெல்ல மெல்ல அருள் இன்ப அநுபவத் துறையில் ஏறி வந்தவர் என்பதை அவர் பா டிய அநுபவ ரீலேப் பாட்டுக்களில் உள்ள வெவ்வேறு வகை உணர்ச்சி வெளியீடுகள் தெளி வுறுத்தும். இறைவன் ஒருவன் உளன் என்பதும், உலகில் உண்பதும் உறங்குவதும் புலன்களுக்குரிய நுகர்ச்சிகளைப் பெறுவதுமாகியவற்றை யன்றி வேறுவகையான அநுபவம் கிச்சயமாக உண்டு என்பதும், மனிதன் இறையருளே நம்பி. முயன்ருல் அந்த அநுபவம் கிடைக்கும் என்பதும், நாம் எத்தனே அறியாமையில் உழன்ருலும் அதனே மாய்க்க வல்ல பெருங்கருணேயாளன் இறைவன் என்பதும், அவன் அருள் அடைய இன்ன காலம் இன்ன இடம் இன்ன கிலேயுடையார் என்ற வேறுபாடு இன்றி முயன்ருல் யாவரும் அவ்வின்பத்தைப் பெறலாம் என்பதும் அருணகிரி நாதர் திருவாக்கிலே ஆழ்ந்து கின்ருல் புலனாகும். கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/11&oldid=855705" இலிருந்து மீள்விக்கப்பட்டது