பக்கம்:ஞான மாலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இந்த மூன்று நிலைகளிலும் அருணகிரியார் பிறர் வாக் கிலே காணுத பல கருத்துக்களை அருளியிருக்கிருர். முருக னுடைய புகழை உணர்த்தும் நூல்கள் வடமொழியிலும், தென்மொழியிலும் பல. ஆகமம், புராணம், துதி நூல்கள் என்ற வகையில் அமைந்த அவை அவனுடைய தத்துவத் தையும் திருவிளையாடலையும் கூறுகின்றன. அவற்றில் காணுத பல செய்திகள் அருணகிரியார் வாக்காகிய திருப் புகழ் முதலியவற்றில் வருகின்றன. - உலகியலேப் பற்றிச் சொல்வதில் அருணகிரிநாதரை மிஞ்சியவர் யாருமே இல்லை யென்று சொல்லிவிடலாம். இறையருளின்பம் பெறுவதற்கு மரருன துறைகளே யெல் லாம் அவர் மிக விரிவாக எடுத்துரைக்கிருர். காமம் என்ற பேயால் விளையும் அலங்கோலங்களை எத்தனையோ வகை யில் அக்கு வேறு ஆணி. வேருக எடுத்துச் சொல்லி யிருக் கிருர், பெண்மயலால் விளையும் விளைவுகளை யெல்லாம் தம் மேல் ஏற்றிக்கொண்டு, நான் இவ்வாறு உழலலாமா?" என்று பாடியிருக்கிரு.ர். அவற்றை அவருடைய அநுபவங் கள் என்று சொல்வது முறையன்று. உலகத்தவர்பாலுள்ள கருணையால் உலகில் மிகுதியாக உள்ள நோய் அதுதான் என்று அறிந்து, அதனினின்றும் நீங்கவேண்டுமென்று முருகனிடம் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிருர். அதுபவ கிலையில் கின்று பாடிய பாடல்களும் மிகச் சிறந்தவை. தாயுமானவரே, . . . . . . . - 'ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாக ஒக்சொல் விளம்பினர்யார்?" என்று பாராட்டுகிரு.ர். - - அநுபவம் என்பது வெவ்வேறு நிலைகளில் வெவ் வேருக இருக்கும். முடிந்த முடிவான அநுபவமே முத்தி யென்பது, அதற்குமுன் உண்டாவது சீவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/10&oldid=855694" இலிருந்து மீள்விக்கப்பட்டது