பக்கம்:ஞான மாலை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

í Ó8 ஞான மாலே ஆடும் பரி - தோகையை விரித்து நடமாடுகிற மயில்; வேல் எம்பெருமான் திருக்கரத்தில் இருக்கும் ஞானசக்தியாகிய வேலாயுதம்; அணி சேவல் அவனது வெற்றிச் சிறப்பைக் காட்டி அழகு செய் கின்ற கொடியாகிய சேவல். இந்த மூன்றையும் பல முறை சொல்லிச் சொல்லிப் பாராட்டவேண்டும். அப் :படிப்பாராட்டுகின்ற தொண்டையே தம்முடைய பணி யாக வகுத்தருளவேண்டும் என்று முருகனைப் பிரார்த் திக்கிருர். . இன்னும் முருகப்பெருமான் கோயிலுக்குள்ளே செல்லவில்லை. வாசலில் புகும்போது அவளுேடு தொடர்புடைய பொருள்களைக் கண்டு மனம் உருகித் தம்முடைய பணிவையும், பக்குவத்தையும் தெரிவிக் கின்ருர், "இந்தத் திருவாசலில் நின்று இவற்றைத் துதித்துக் கொண்டிருந்தால் என்னுடைய வாழ்க்கை கிறைவுபடுமே" என்று சொல்கிருர். அப்படிச் சொல் லும்போது அவர் வெறும் மயிலைச் சொல்லவில்லை. இரும்புப் பட்டறையில் அடிக்கும் வேலைச் சொல்ல வில்லை. தினந்தோறும் விடியற்காலையில் கூவுகின்ற கோழியைச் சொல்லவில்லை. எம்பெருமானேடு தொடர்புடைய மயிலையும், வேலையும், சேவலையுமே சொல்கிருர். அவை எம்பெருமாளுேடு தொடர்பு பெற்றமையில்ை பெருமை அடைந்தன. ஆகவே அவற்றைத் துதிக்கின்றபோது இறைவனுடைய கினைவும் உள்ளத்திற்குள் சுருதி போடும். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/126&oldid=855724" இலிருந்து மீள்விக்கப்பட்டது