பக்கம்:ஞான மாலை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி 109.3 மந்திர நூல் கந்தர் அநுபூதி மந்திர சாஸ்திரம் போன்றது. மிகவும் சுருக்கமான பாடல்கள் சுருங்கிய மந்திரங் களப் போலவே இதில் அமைந்திருக்கின்றன. பொருள் செறிவு மிக்கவை. பல காலமாகத் தமிழ்நாட் டில்உள்ள முருகன்அடியார்கள் இந்த நூலேப் பாராய ணம் செய்து வருகிருர்கள். அப்படிச் செய்வதனல் இம்மை வாழ்விலே வரும் இடையூறுகள் போகும் என்றும், தம்முடைய விருப்பங்கள் எல்லாம் நிறை வேறும் என்றும் பக்தர்கள் நம்புகிருர்கள். அந்த நம்பிக்கை கைவரப் பெற்றுக் கந்தர் அநுபூதியைச் சிறந்த துதிப்பாடலாகப் பாராட்டுகிற மக்கள் இப் போதும் இருக்கிருர்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் தனித்தனியே சக்கரம் எழுதிப் பூசை செய்கிற முறையும் உண்டு. இன்ன பாட்டுக்கு இன்ன பூ, இன்ன நிவேதனம் என்ற வரையறைகட்ட வைத்திருக் கிருர்கள். மந்திரங்களுக்கும் இயந்திரம் பூசை முதலியன உண்டு. கந்தர் அநுபூதியும் மந்திர சாஸ்திரம் என்ற கினைப்பினுல் அத்தகைய வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. - பிரணவம் வேதம் மந்திரங்கள் - நிறைந்தது. மந்திரம் என்றே அதைக் கூறுவார்கள். ஆகமத்தைத் தந்திரம் என்பர். மந்திரமும் தந்திரமும் ஆளுய் நீயே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/127&oldid=855726" இலிருந்து மீள்விக்கப்பட்டது