பக்கம்:ஞான மாலை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி 111 "தோடுடைய செவியன்' என்று முதல் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினர். வேதம் பிரணவத்தில் தொடங்குவது போலத் தமிழ் வேதமாகிய தேவாரமும் பிரணவத்தில் தொடங்கு கிறது. வடமொழி வேதத்தில் பிரணவம் வெளிப்படை யாக இருக்கிறது. தமிழில் உள்ள வேதத்திலோ சற்றே மறைந்து கிற்கிறது. வைரங்களை விற்கிற கடையிலிருந்து ஒருவன் வைரம் வாங்கில்ை அதனை அப்படியே பயன்படுத்திக்கொள்வது இல்லை. தங்கத் தினுல் நல்ல கட்டிடம் கட்டி அதில் வைரத்தைப் புதைத்து அணிந்து கொள்வான். அதுபோலவே வடமொழி வேதத்தில் உள்ள ஓங்காரத்தின் முக்கிய எழுத்தாகிய ஓம் என்பதைத் தகர மெய்யோடு சார்த்தி, தோ’ என்று ஆரம்பித்தார். தோடுடைய செவியன்’ என்பது தேவாரத்தின் தொடக்கம். இதனைச் சேக்கிழார் சுவாமிகள் திருவாய் மலர்க் தருளியிருக்கிருர். . . எல்லேயிலா மமுறைமுதல்மெய் யுடன்எடுத்த எழுதுமறை.' வடமொழி வேதம் எழுதாக் கிளவி, காதினுல் கேட் பது. அதனுல் அதற்குச் சுருதி என்ற பெயர் உண்டா யிற்று. தமிழிலும் கேள்வி என்ற பெயர் உண்டு. அது எல்லையில்லா மறை. அனந்தாவை வேதா: என்பர். அந்த எல்லையில்லா மறையின் முதலாகிய பிரணவத்தை ஒரு மெய்யெழுத்தோடு சார்த்தி, எழுதும் மறையாகிய தேவாரத்தைத் தொடங்கினர் என்றுசேக்கிழார் சொல்கிருர், த் என்ற மெய்யோடு ஓகாரத்தை வைத்துத் தோ என்று தொடங்குகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/129&oldid=855730" இலிருந்து மீள்விக்கப்பட்டது