பக்கம்:ஞான மாலை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113. ஞான மாலை தேவாரத் திருப்பதிகங்களைப் பாடினர் ஞானசம்பந்தப் பெருமான். ஞானசம்பந்தப் பெருமானே முருகப்பெருமான் அவதாரம் என்று கினப்பவர் அருணகிரியார். அப் பெருமானிடத்தில் மிகச் சிறந்த பக்தி உடையவர். அந்தப் பெருமான், "எனது ரை தனது ரையாக' என்று, தாம் பாடினவை எல்லாம் இறைவன் திரு வாக்கே என்று அநுபவித்துச் சொன்னர். அவ்வாறே அருணகிரிநாதப் பெருமானும் இந்த அநுபூதியைப் பாடுகிருர். அப்படிப் பாடும்போது ஞானசம்பந்தப் பெருமானுடைய முறையைப் பின்பற்றி வேதத்தின் முதல் எழுத்தாகிய பிரணவத்தை இந்த நூலுக்கும் முதலில் வைக்கக் கருதினர். ஞானசம்பந்தப் பெரு. மான் செய்ததையே செய்திருக்கலாம். ஆளுல் அருட் புலமை மிக்க அருணகிரிநாதப் பெருமான் அவ்வாறு செய்யாமல் புதிய முறையில் அந்தக் காரியத்தைச் செய்தார். - ஆடும் பரி - ஓங்காரம் அகார உகார மகாரங்கள் அடங்கியது என்பதை முன்பு பார்த்தோம். அந்த மூன்று எழுத்தை யும் தனித்தனியே கந்தர் அநுபூதியின் முதல் பாட்டில் தொடக்கத்தில் வைத்தார். அகாரத்தில் பின்னும் ஓர் ஆதாரம் கூட்டி ஆகாரம் அமைத்தார். ஆகாரம் இரண்டு மாத்திரை உடையது. அகாரத் தின் விகாரமே ஆகாரம் என்று இலக்கணக்காரர் சொல்வர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/130&oldid=855734" இலிருந்து மீள்விக்கப்பட்டது