பக்கம்:ஞான மாலை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி 113 அடுத்த ஒலியாகிய உ காரத்தை ட் என்ற மெய் யின்மேல் சார்த்தி டு"என்று சொன்ஞர். பின்பு மூன்ரு வது எழுத்தாகிய 'ம்' என்பதை அப்படியே வைத்தார். இவ்வாறே பிரணவத்தின் மூன்று எழுத்துக்களாகிய அ கார, உ. கார, ம காரங்களில் ஒன்றை நீட்டினர்; ஒன்றைக் கூட்டினர்; ஒன்றை அப்படியே காட்டினர். இந்த வகையில் அகாரத்தின் விகாரமாகிய ஆ வும், உகாரம் சேர்ந்த ட கர மெய்யாகிய 'டு வும், இயல் பாகவே உள்ள ம்-மும் சேர்ந்து, - ஆ டு ம் என்ற சொல்லாயின. - ஆடும் பரி என்பது முதல் பாட்டின் ஆரம்பம். ஆடும் என்ற சொல்லில் அகார, உகார, மகாரங்கள் கரந்து நின்று ஓங்கார ஒலியை எழுப்புகின்றன. ஆடும் என்ற சொல்லில் மகாரம் மறையாமல் இருக்கவேண்டும் என்று கருதி, அதன் பின்னல் பரி என்ற சொல்லை நிறுவினர். அவ்விடத்தில் மயில் என்று போட்டால் "ஆடு மயில்” என்று சந்தியில் மகரம் மறைந்துவிடும். குதிரை என்று போட்டால் மகரம் திரிந்து ங்கரமாகும். தோகை என்று போட் டால் மகரம் திரிந்து நகரமாகும். மகாரம் திரியாமல் இருப்பதற்கு ஏற்றபடி பகரம் முன் கிற்கும் வண்ணம் பரி' என்ற சொல்லைச் சேர்த்து, ஆடும் பரி என்ருர், இந்த வகையில் கந்தர் அநுபூதியின் முதல் சொல் ஓங்காரத்தின் விரிவாக அமைக்தது என்ப தைப் பார்த்தோம். இனி மற்ருெரு வகையிலும் பிரண வத்தின் கினைப்பை இந்தத் தொடர் கொண்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/131&oldid=855736" இலிருந்து மீள்விக்கப்பட்டது