பக்கம்:ஞான மாலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஞான மாலை எவ்வளவு வேண்டுமோ அவற்றை மாத்திரம் வைத் திருக்கிருன் என்று தோன்றுகிறது.இது தேவாரத்தின் திறத்திலும் காணும் உண்மை. தேவாரம் பாடிய மூவர் பெருமக்களும் பல்லாயிரம் பதிகங்கள் பாடினர் கள்.அத்தனையும் இப்போது நமக்குக்கிடைக்கவில்லை. எல்லாம் இருந்தால் சோம்பேறி மக்கள் ஒன்றையும் படிக்க மாட்டார்கள் என்று இறைவன் எண்ணிச் சில வற்றையே விட்டு வைத்தான்போலும் சிதம்பரத்தில் கம்பியாண்டார் கம்பியின் உதவியைக் கொண்டு இராசராச சோழன் தேவார ஏட்டுச் சுவடிகளை எடுத் தாலும், அப்போது கறையான் அரிக்கப் பெற்று அவை கிடந்தன. அதைக் கண்டு கண்ணிர் விட்ட போது, 'இப்போதைக்கு வேண்டியவற்றையே வைத்தோம்” என்று அசரீரியாக இறைவன் சொன்னு னென்று ஒரு வரலாறு வழங்குகிறது. வரவர மனிதன் சோம்பேறியாகி எல்லாவற்றையும் கருவிகள் மூல மாகவும், பிறர் வாயிலாகவும் கிறைவேற்றிக் கொள் ளும் மனப்பாங்கு உடையவனுகிவிட்டான். சாப்பிடு வதும் குறைவு. மனனம் பண்ணுவதும் குறைவு. ஆளுல் ஆசைப் படுவதோ பலபல மடங்காக இருக் கிறது. ஆகவே, சோம்பேறிகள் உலகத்திற்கு இவ் வளவு வேண்டாம்' என்று இறைவன் எண்ணி அவற்றை யெல்லாம் மறைத்துவிட்டான் போலும்! கேட்டுப் பெற்றது சிவபெருமான் வேதத்தை அருளிச் செய்தான், அன்றியும் எப்போதும் வேதத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/26&oldid=855794" இலிருந்து மீள்விக்கப்பட்டது