பக்கம்:ஞான மாலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலே 9 "யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்' என்று பழைய நூலில் வருகிறது. இறைவன் எப் போதும் சாமவேகத்தை முழங்கிக்கொண்டிருக்கிருன் என்று கூறுவர். - அவனுக்கு அந்த வேதம் போதவில்லை. புதிதாக ஒரு வேதம் வரவேண்டுமென்று கினைத்தான். மூவர் முதலிகளால் தேவாரத்தைப் பாடச் செய்து ஏற்றுக் கொண்டான். சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பார்த்து. 'நீ தேவாரம் பாடு' என்று கட்டளையிட்டான். சுந்தாமூர்த்தி சுவாமிகள் இறைவனைப் பூசித்து வழிபடும் குலத்தில் பிறந்தவர்; முப்போதும் திருமேனி தீண்டும் ஆதி சைவர் குலத்தில் அவதாரம் செய்த வர். அவரை ஆண்டவன் பார்த்து, 'எனக்கு அருச் சனே பாட்டு; ஆதலின் ே தமிழில் பாடு” என்று திருவாய் மலர்ந்தருளினுர், 'அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்ருர் தூமறை பாடும் வாயார்' என்று சேக்கிழார் சொல்கிருர், அவர் வேதத்தைப் பாடிக்கொண்டே இருப்பவர். ஆலுைம் சற்று வேறு வகையான ஒலி காதில் விழவேண்டுமென்று எண்ணி ஞர் போலும் சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தமிழ்ப் பாடல்களைப் பாடும்படி சொன்னுர். தேவாரம் வேதத் தைப் போன்றது; வேதமாகவே மதிக்கப்படுகின்றது. இறைவன் தன்னுடைய புகழைத் தன்னுடைய குழந்தையாகிய சுந்தரமூர்த்தி காயைைர விட்டுப் பாடச் சொல்லிக் கேட்டான். அதுபோலவே முருகப் பெருமானும் அருணகிரிநாதரிடம் தன்னைப் பாடும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/27&oldid=855796" இலிருந்து மீள்விக்கப்பட்டது