பக்கம்:ஞான மாலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 - . ஞான மாலே கேட்டுத் திருப்புகழை அவர் வாயிலாக மலரச். செய்தான். இறைவனே கேட்டு ஒன்றைப் பெறுவது ஒரு தனிச் சிறப்பு. முருகன் அருணகிரி காதரைப் பார்த்து, 'இன்ன இன்னபடி பாடு: இன்ன இன்ன வற்றை எல்லாம் வைத்துப் பாடு”. என்று சொன்ன ளும். அதை அருணகிரிகாதப் பெருமானே ஒரு பாட்டில் அருளியிருக்கிரு.ர். 'பக்கரைவி சித்ரமணி பொற்கலனை இட்டநடை பட்சியெனும் உக்ரதுர கமும்பேப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழியப் பட்டுருவ விட்டருள்கை வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் சட்சைதரு சிற்றடியும் முற்றியபன் னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு செப்பென எனக்கருள் கை மறவேனே." "இப்படிச் செப்புவாயாக என்று முருகப் பெருமான் எனக்கு ஆணையிட்டான். அதை நான் மறக்கமாட் டேன்” என்று அவர் சொல்கிருர். இதல்ை, முருகனே விரும்பித் திருப்புகழை ஏற்றுக்கொண்டான் என்ற செய்தி தெரிகிறது. அப்படிப் பாடச் சொல்லி அருணகிரிநாதப் பெருமானுக்கு அதற்குரிய ஆற்றலை அருளிஞன். . 'அருணதள பாதபத்மம் அதுகிதமு மேதுதிக்க அரியதமிழ் தான் அளித்த-முருகோனே" "யாம் ஒதிய கல்வியும்எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்த தளுல்' என்று திருப்புகழிலும், அநுபூதியிலும் அருனே முனிவர் பாடியிருக்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/28&oldid=855798" இலிருந்து மீள்விக்கப்பட்டது