பக்கம்:ஞான மாலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலே 1 Í அவர் தன்னைப் பாடவேண்டுமென்று விரும்பி அதற்கு எற்ற தகுதியையும் முருகன் கொடுத்தான். இப்படிச் செய்வது எதற்காக என்று தோன்றும். "தானே ஆற்றலைக் கொடுத்து, சொல்லைக் கொடுத்து, பொருளேக் கொடுத்துப் பாட வைப்பா னேன்? தான் கொடுத்ததையே மீட்டும் வாங்கு வானேன்?' என்ற ஓர் எண்ணம் தோன்றும். காம் சாப்பிட்டு விட்டுத் தாம்பூலம் போட்டுக்கொள் கிருேம். நம் குழந்தையை மடிமீது வைத்துக் கொண்டு வெற்றிலைக்குச் சுண்ணும்பு தடவி மடிக் கிருேம். அதைக் குழந்தையின் கையில் கொடுத்து கம் வாயில் கொடுக்கச் சொல்கிருேம். அது கொடுத் தால் கமக்கு உண்டாகிற இன்பத்திற்கு அளவே இருப்பது @6ు &ు. குழந்தை வெற்றிலையை உண்டாக்கவில்லை. التي تنبي சுண்ணும்பு தடவி மடிக்கவில்லே. நாம் வாங்கின வெற்றிலேயை, நாம் சுண்ணும்பு தடவி மடித்து அதன் கையில் கொடுத்து கம் வாயில் கொடுக்கும்படி சொல்லி வாங்கிக் கொள்கிருேம். அப்போது இன்பம் உண்டாகிறது. 'இது எதற்காக? காமே கம் வாயில் போட்டுக் கொள்ளலாமே!” என்று யாராவது சொல்வார்களா? அப்படி யாராவது சொன்னுல் அவரை மரக்கட்டை என்றுதான் சொல்ல வேண்டும். தங்தைக்கும் குழந்தைக்கும் உள்ள அன்புணர்ச்சியை உணர்ந்த வர்களுக்கு அந்த இன்பம் எத்தகையது என்று. தெரியவரும். அதை விளக்கமுடியாது; உணரத்தான் முடியும். பல மனிதர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை. அவர்கள், 'நமக்கும் இப்படிக்கிடைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/29&oldid=855801" இலிருந்து மீள்விக்கப்பட்டது