பக்கம்:ஞான மாலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-12 ஞான மாலை கக் கட்டாதா?’ என்று எண்ணி ஏங்குகிருர்கள். தங்தை தன்னிடத்தில் கொடுத்த வெற்றிலேயைக் குழந்தை தங்தைக்குக் கொடுப்பது போல, முருகன் கொடுத்த ஆற்றலை வைத்துக்கொண்டு அருணகிரி யார் பாடினர். அதனால் முருகப் பெருமானுக்கு மிக்க இன்பம் உண்டாயிற்று. விளைந்த புகழ் முருகப்பெருமான்அருளின ஆற்றலைக் கொண்டு அருணகிரியார் மிகவும் அற்புதமான திருப்புகழைப் பாடினர். அந்தத் திருப்புகழில் தாம் பட்ட துன்பங் களேயும், உலகத்தார் அடைகின்ற துன்பங்களையும், இறைவன் திருவருளால் தாம்அடைந்த அநுபவங்களே யும் விரிவாகச் சொன்னுர். முன்னும் அத்தகைய பாடல்கள் இல்லை; பின்னும் இல்லை. அவற்றைக் கேட்டு மக்கள் யாவரும், இவை எத்தனே சிறப்பாக இருக்கின்றன! இவற்றின் ஓசையே மிக அருமையாக இருக்கிறதே!” என்று வியக்தார்கள். 'முருகனுடைய தோத்திரங்களுக்குள்ளேயே இத்தகைய அருமை யான பாமாலையை எங்கும் கண்டது இல்லை" என்று பாராட்டினர்கள். அவற்றை யெல்லாம் அருணகிரி காதர் செவியேற்ருர். நம்முடைய பாட்டை இவர் கள் பாராட்டுகிருர்கள்; காம் பெரிய கவி' என்று கினைத்து அகங்காரம் அடையவில்லை. எனக்கு என்ன ஆற்றல் இருக்கிறது! இவ்வாறு பாடும்படியாக எம்பெருமான் அல்லவா செய்தான்? பாடுகின்ற ஆற்றலை அவன் கொடுத்துப் பாடின பிறகும் அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/30&oldid=855805" இலிருந்து மீள்விக்கப்பட்டது