பக்கம்:ஞான மாலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - ஞான மாலை ஒரு பெரிய புலவரைச் சிறந்த செல்வர் ஒருவர் விருந்துக்கு அழைத்தார். புலவர் எளிமையானவர்; அடக்கம் உள்ளவர்; சுருங்கிய உணவை உண்பவர். செல்வர் பெரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருங் தார். பல வகையான கறிகளையும், குழம்பு வகைகளையும், பட்சிய வகைகளையும் சமைக்கச் செய்திருந்தார். விருந்தாளி, "எனக்கு இஞ்சித் துவை யல் வேண்டும்” என்று கேட்டார். விருந்தளித்தவ ருக்கு அது ஒரு பெரிதா? அதையும் பின்பு செய்து போடச் சொன்னர், "இதோ உங்களுக்கு வேண்டிய இஞ்சித் துவையல்' என்று காட்டினர். தம் முடைய உயர்ந்த நிலைக்கு ஏற்றபடி விருந்துப் பண் டங்களைச் சமைத்து. அவருடைய விருப்பத்தையும் அறிந்து, அவர் கேட்டதையும் சமைத்துப் பரிமாறச் செய்தார். இதைப்போல, ஆண்டவன் விரும்ப அவன் திருவருளால் பாடிய பதினுருயிரம் திருப்புக ழுக்கு மேலே, “என்னுடைய விருப்பத்திற்குச் சில பாடல்கள் பாடவேண்டும்” என்று அருணகிரியார் கேட்டார். அதையும் ஒரு திருப்புகழ் சொல்கிறது. “முருகா, உன் விருப்பப்படியே நீ சொன்ன அடையாளங்களை வைத்து நான் பாடினேன். அப்ப டிப் பாடியும் என் மனம் அமைதி பெறவில்லை. என் நாத் தினவு எடுக்கிறது. உன் விருப்பத்திற்காகப் பாடிய பாடல்கள் போதவில்லை. இப்போது கான் சில அடையாளம் சொல்கிறேன். அந்த அடையா ளப்படி என் விருப்பத்திற்காகச் சில பாடல்களைப் பாட வேண்டும். அதற்குரிய ஆற்றலையும் நீ அருளிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/34&oldid=855814" இலிருந்து மீள்விக்கப்பட்டது