பக்கம்:ஞான மாலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலே 17 செய்யவேண்டும்” என்ற பொருள் தோன்ற அவர் பாடுகிருர். - - அவருக்கு ஆசை மிகுதியாக உண்டாயிற்ரும். எடுத்த உடனே"ஆசைகூர் பக்தனேன்"என்று ஆரம் பிக்கிருர், கூர்தல் என்ற சொல்லுக்கு உள்ளது சிறத்தல் என்பது பொருள். இப்படிப் பாடவேண்டு மென்று தோற்றிய ஆசை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போயிற்ரும். ஆசை என்று சொன்னலும் அதுவும் பக்தியினுடைய வேறுபாடுதான். "ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே' என்று மணிவாசகர் பாடுவார். இறைவன் அருளைப் பெறவேண்டுமென்ற ஆசையும், அவனேயே நினைக் திருக்கவேண்டுமென்ற ஆசையும். அவனுடைய திருவருள் மயமாய் ஆகவேண்டுமென்ற ஆசையும் ஆசைகள் அல்ல; பக்தியின் வேறுபாடுகள்; வேறு பட்ட நிலைகள். அவ்வாறே முருகப்பெருமானைப் பாட வேண்டுமென்று எழுந்த ஆசையும் விசித்திரமான பக்தி நிலையில் ஒன்றுதான். பாமாலை இனி அருணகிரியார் எதற்கு ஆசைப்பட்டார் என்பதைப் பார்க்கலாம். அவர் ஆண்டவனுடைய திருவடியைத் தரிசித்தார். அது செக்கச் செவேல் என்று இருந்தது; அழகிய பவள நிறம் பெற்று விளங்கியது. முருகனே சிவந்த திருமேனி உடை யவன். ஞா. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/35&oldid=855816" இலிருந்து மீள்விக்கப்பட்டது