பக்கம்:ஞான மாலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஞான மாலே "செய்யன் சிவந்த ஆடையின்' என்று திருமுருகாற்றுப்படையும், 'பவளத் தன்ன மேனித் திகழ்ஒளி' என்று குறுந்தொகையும் கூறுகின்றன. "செங்கோட்டுப் பிள்ளை சிவந்த பிள்ளை' என்பது ஒரு தனிப் பாட்டு. அந்தக் குழந்தையின் பாதத்தைப் பற்றிக்கொண்டார் அருணகிரிநாதர்; அவனுடைய திருவடியின் பவள வண்ணத்தைக் கண்டு கண்டு பாராட்டினர். அழகிய குழந்தை மெல் லத் தளர்நடையிட்டு வருமானல் அதன் காலுக்குத் தண்டை போடவேண்டுமென்று தாய் கினைப்பாள். அதுபோல, எம்பெருமானுடைய கோலப்பிரவாள பாதத்தைத் தரிசித்தவுடன் அருணகிரியாருக்கு ஓர் ஆசை எழுந்தது. அந்த அழகான பவள வண்ணத் திருவடிக்கு அழகான மாலையை அணியவேண்டு மென்று ஆசைப்பட்டார். அந்த ஆசையை வேறு யாரிடத்தில் சொல்வது? முருகப்பெருமானிடத்தில் சொல்கிருர். குழந்தையின் தகுதிக்கும், குழந்தையைப் பெற்ற வனுடைய தகுதிக்கும் ஏற்றபடி அதற்கு அணிகளே அணிவார்கள். இங்கே முருகப் பெருமானுடைய திருவடிக்கு ஏற்றபடி அல்லவா அலங்காரம் செய்ய வேண்டும்? செய்கிறவர் அருணகிரியார். ஆகையால் அவரிடத்தில் உள்ள பொருளுக்கு ஏற்ற அலங்காரம் செய்யவேண்டும். அவர் வாடாத பாமாலையை அணிந்து அழகு பார்க்க விரும்பினர். கடலுக்குப் போய் வருணனைப் பூசிக்கின்ருேம், அர்க்கியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/36&oldid=855818" இலிருந்து மீள்விக்கப்பட்டது