பக்கம்:ஞான மாலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஞான மாலே குஞ்சம் இருக்கவேண்டும். ருத்திராட்ச மாலையைப் போட்டுக்கொண்டிருந்தாலும் குஞ்சமாகக் கெளரீசங் கரம் இணைத்திருப்பதைப் பார்க்கிருேம். அருணகிரியார் இறைவனுக்கு அணியப் புகுந்த பாமாலைக்கு ஒரு குஞ்சம் வேண்டும். அழகான தாம ரைப் பூவைக் குஞ்சமாக வைத்துக் கட்டவேண்டு மென்று அவர் விரும்புகிருர். பூமாலைக்குப் பொய்கை யிலே மலரும் தாமரை குஞ்சமாக இருக்கலாம். பாமாலைக்குக் குஞ்சம் எது? என்னுடைய நெஞ்ச மாகிய குஞ்சத்தை வைத்து இந்தப் பாமாலையைக் கட்ட விரும்புகிறேன்’ என்று அவர் பாடுகிருர். 'ஆசைகூர் பக்தனேன் மனே பத்ம மானபூ வைத்து நடுவே.' "நான் பாடுகிற பாமாலையின் நடுவிலே மனமாகிய தாமரையை வைத்துக் கட்டவேண்டும் என்பது அருணகிரியார் விண்ணப்பம். அதனுடைய பொருள் என்ன? பாமாலையை காவின் ஆற்றலினலே பாடி விடலாம். பிறர் வியக்கவேண்டுமென்று சமத்கார மாகப் பாடலாம். ஆனல் இங்கே முருகனைப் பாடு கிற பாடலில் வெறும் புலமை கயம் இருந்தால் போதாது. அதை மனமாரப் பாடவேண்டும், மனத் தில் தோற்றுகிற பக்தியின் விளைவாக அந்தப் பாமாலை எழவேண்டும். எந்தச் செயலும் மனத்தோடு ஒட்டி வராவிட்டால் உண்மையான செயலாகாது. இறை வன் திருவடியை உள்ளத்திலே வைத்து அதனுல் உண்டாகின்ற உணர்ச்சியைக் கொண்டு பாமாலை பாடவேண்டுமென்பதே அருணகிரியார் விண்ணம். இதைத்தான், - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/38&oldid=855821" இலிருந்து மீள்விக்கப்பட்டது