பக்கம்:ஞான மாலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுான gf 'மனே பத்மமான பூ வைத்து நடுவே' என்று அவர் பாடுகிருர். பிற உறுப்புகள் சொற்களாலாகிய பாமாலையை அணியவேண்டும். சொல் என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனலும் காம் ஊகித்துக் கொள்ளலாம். இந்த மாலை ஆயில் உள்ள மலர்கள் செஞ்சொற்கள். மலர்களே எல்லாம் ஒன்று சேர்த்துக் கட்டுவதற்கு காரோ, நூலோ வேண்டும். அருணகிரிநாதர் பாமாலை கட்டு வதற்கு ஏற்ற நூல் இன்னதென்பதை அறிந்தவர். மனத்தைக் குஞ்சமாக வைத்துக் கட்டுவதற்கு அந்த நூலே சிறந்தது. அதுதான் அன்பு. அன்பு என்னும் நூலே இட்டு, மனமாகிய தாமரையை நடுவிலே வைத் துச் சொல்லாகிய மலர்களால் பாமாலை கட்ட வேண்டும். மலர்களுடே நூல் செல்கிறது. எல்லா மலர் களையும் இணைப்பது நூல். அதுபோல இறைவனிடத் தில் வைக்கும் அன்பு சொற்களினூடே ஒளிரவேண் டும். அன்பு இல்லாத சொல் மணக்காது. ஒவ்வொரு சொல்லையும் அன்போடு சேர்த்துப் பாடவேண்டும். அதனுல் அன்பை நூலாகச் சொன்னர். பூமாலையைக் கையினலே கட்டுவார்கள். இங்கே பாமாலையை காவிேைல கட்டவேண்டும். அழகிய திருவடியை உடைய முருகப்பெருமானுக்கு அலங் காரமாக மாலே கட்டவேண்டும். - 'நாவிலே சித்ரமாகவே கட்டி"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/39&oldid=855823" இலிருந்து மீள்விக்கப்பட்டது