பக்கம்:ஞான மாலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஞான மாலே மணமாலை இந்த மாலே நறுமண மலர் மாலையாக இருக்க வேண்டும். பாமாலையில் இருக்கும் மணம் எது? ஒவ். வொரு பூவுக்கும் ஒவ்வொரு மனம் உண்டு. ரோஜா, மல்லிகை, சண்பகம் என்று உள்ள பூக்களுக்குத் தனித்தனியே மனம் உண்டு. தமிழ் காட்டில் மலர் கிற மலர்கள் யாவும் மணம் உடையன. "மலரும் மணமும்போல”என்ற பழமொழி தமிழிலே இருக்கிறது. மணம் இல்லாத மலர்களுக்கு இந்த காட்டில் மதிப்பு இல்லை. மலர்கள் கிறைந்த மாலையில் மணமும் கிரம்பி யிருக்கும். அருணகிரியார் கட்ட இருக்கும் பாமாலை யில் இன்ன மணம் வேண்டும் என்பதை அவரே சொல்கிருர். ஆண்டவனே, நான் கட்டும் மாலையில் ஞான மனம் இருக்கவேண்டும். அதோடு அது நல்ல வண்ணத்தோடு பிரகாசிக்கவேண்டும்.” கண்ணுக் கும், கைக்கும், மூக்குக்கும் இனிமை தருவனவாக இருப்பவை மலர், மணம், தண்மை, வண்ணம் முதலி யன மலர்களில் உண்டு. இங்கே அருணகிரியார் கட்டுகிற பாமாலையில் ஞான மனம் வீசவேண்டுமாம். "ஒரு ஞான வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப,' ஞானம் என்னும் மணம் வீசுகின்ற ஞானமாலை யாகத் தாம் பாடுகிற பாமாலை விளங்கவேண்டுமென்று விரும்புகிருர் அருணே முனிவர். ஞான மணத்தை அந்தப் பாமாலை பெற்றிருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமாம். ஒரு மலர் மணமுடையதா என்பதை மூக்குடைய மனிதன் அறிந்துகொள்ள லாம் என்று காம் கினைக்கிருேம். உண்மையில் நுட்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/40&oldid=855828" இலிருந்து மீள்விக்கப்பட்டது