பக்கம்:ஞான மாலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலே 25 கலைகளிலும் வல்லவனுகிய சீவகன் அங்கே வந்தான். அவனிடத்தில் இரண்டு பேரும் தம்முடைய வழக் கைச் சொன்னர்கள். அவன் இரண்டு சுண்ணங் களையும் கையில் எடுத்தான். அவற்றை வானிலே துாவின்ை. ஒருத்தியினுடைய சுண்ணம் வானத் திலே பறக்கும்போதே அதை வண்டுகள் வந்து மொய்த்தன. இதுதான் சிறந்த சுண்ணம் என்று அவன் சொன்னன். இதிலிருந்து, நல்ல மணமுடைய பொருளே மனி தன் இனம் தெரிந்து கொள்வதைக் காட்டிலும் வண்டே திறமையுடன் தெரிந்து கொள்ளும் என் பதை உணர்கிருேம். பூவின் மணத்தைத் தெரிந்து கொள்வதற்கு வண்டு நிபுணரைப் போல உதவு கிறது. - மணம் உடையது இம் மாலை என்று வண்டு சொல்லவேண்டும். அருணகிரியார் கட்டும் பாமாலை யில் ஞான மணம் வீசுகின்றது என்பதைச் சொல்லும் கிபுணன் யார்? முருகனே இது கல்ல மன முடையது என்று சொல்லலாம். அல்லது அருண கிரியாரே தம்முடைய பாடலில் ஞான மணம் இருக் கிறதென்று சொல்லலாம். ஆணுல் அவர் அப்படிச் சொல்வதை விரும்பவில்லை. "நான் என்னுடைய பாட்டில் மணம் இருக்கிறது என்று சொன்னுல் அது அகங்காரத்தின் விளைவாகும். நீ என்னிடத்திலே உள்ள குற்றங்களே மறந்து பெரும் கருணையினுல் தாய் தன் குழந்தையைப் பாராட்டுவது போலப் பாராட்டலாம். அது அபிமானத்தின் விளைவு. ஆத லால் நீயும் அதனுடைய திறத்தைச் சொல்வதற்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/43&oldid=855834" இலிருந்து மீள்விக்கப்பட்டது