பக்கம்:ஞான மாலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஞான மாலை தகுதி உடையவன் அல்லன். மூன்ருவது ஆசாமி சொல்ல வேண்டும்” என்று அவர் நினைக்கிரும். 'உள்ளத்தில் குற்றம் இல்லாத சாதுக்கள், ஞானிகள் யாரோ அவர்களுடைய புத்தி என்னும் வண்டு என்னுடைய பாட்டைப் பார்த்துப் பாராட்டி மொய்த்துப் பாடவேண்டும்” என்று அவர் விண்ணப் பித்துக் கொள்கிருர். 'மாசிலோர் புத்திஅளி பாட." அட்சர மாலை இந்தத் தகுதி எல்லாம் அமைந்திருக்கும் மாலை ஒரு பெயரைப் பெறுகிறது, அதை மாத்ருகா புஷ்ப மாலை என்று அருணகிரியார் சொல்கிருர் மாத்ருகா மாலை என்பது கெடுங்கணக்குக்குப் பெயர். எழுத்துக் களின் வரிசை அது. எழுத்துக்கள் 51 என்பது வட மொழி வழக்கு. வடமொழி ஒலிகள் எல்லாமே அதில் அடங்கும். 'ஐம்பதொருவித மான லிபிகளும்' என்று அருணகிரியாரே சொல்வர். மாத்ருகா புஷ்ப மாலை என்பது எழுத்துக்கள் ஐம்பத் தொன்றும் அமைந்த மாலை என்று கொள்ளக்கட்டாது. கோயில் களில் ஐம்பத்தொரு தீபங்களையுடைய விளக்கை ஏற்றுவார்கள். அதற்கு அட்சராலத்தி என்று பெயர். ஐம்பத்தோரட்சரங்களைப் போல ஐம்பத்தொரு தீபங்கள் இருப்பதனுல் அந்தப் பெயரைப் பெறுகிறது. அதுபோல இங்கே அட்சரமாலே கட்டவேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/44&oldid=855836" இலிருந்து மீள்விக்கப்பட்டது