பக்கம்:ஞான மாலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி 41 எங்தை காற்றிசைக்கும் கை காட்டியதை, அருண கிரியார்சொன்னுராம். ஆகையால் அவரைப் பாராட்டு கிருர் தாயுமானவர், - அவரே தலைவர் என்று கண்டு, 'ஐயா அருணகிரி அப்பா' என்று விளித்தார். தந்தை தன் காலத்தில் பலவகை அல்லல்களைப் பட்டு உழைத்துப் பொருளை ஈட்டி அந்தப் பொருளேத் தன் மக்கள் எளிதில் பெறும்படி யாக வைப்பான். அவ்வாறே அருணகிரிகாத சுவாமி கள் இறைவன் திருவருளைப் பெறுவதற்குப் பல பாடு பட்டு அதைப் பெற்றுப் பிறர் கூடியவரையில் எளிதா கப் பெறும்படி அரிய நூலைச் செய்து வைத்தார். இந்தக் கருத்தை கினைந்தே, "அப்பா” என்று விளித் தார் தாயுமானவர். எந்தப் பாட்டைக் கண்டு இப்படி அதிசயப்படு கிருர் என்பதையும் பார்க்கவேண்டும். அதனை ஒரு கண்ணியில் சொல்கிருர். . "கந்தரது பூதிபெற்றுக் கந்தாது பூதிசொற்ற எந்தையருள் நாடி இருக்குங்ா ளெந்நாளோ?' அருணகிரிநாதப் பெருமானது அருளைத் தாம் பெற வேண்டும் என்கிருர் தாயுமானவர். கந்தர் அநுபூதி யைப் பெற்றுப் பாடினவர் அருணகிரியார் என்கிருர். கந்தர் அநுபூதி கலி விருத்தங்களாலாகிய நூல். பாட்டுப் பாடும் ஆற்றல் உள்ளவர்கள் அத்தகைய கலி விருத்தங்களை எவ்வளவு வேண்டுமானுலும் பாடலாம். புலமையும், பாடும் ஆற்றலும் உள்ளவர் கள் இதேமாதிரியான பாடல்களைப் பாடினல் அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/59&oldid=855865" இலிருந்து மீள்விக்கப்பட்டது