பக்கம்:ஞான மாலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-44 ஞான மாலே பவங்கள் எல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவை. கண்ணுல் அழகிய பொருளைக் காண்கிருேம். கண்ட வுடன் மனம் உணர்ந்து மகிழ்கிறது. அப்படியே இனிய ஓசையைக் காதாலே கேட்கும்போது, கேட்ட பிறகு மனத்தில் உணர்ச்சியாகத் தாக்கி இன்பத் தைத் தருகிறது. மெல்லிய தென்றலினல், கறு. மலர்களின் மணத்தால், இனிய சுவைப் பொருள்களி ல்ை காம் இன்பத்தை அடைகிருேம். இவை யாவும் பொறிகளினுல் நுகரும் அநுபவம். புலன்கள் விழித் திருக்கவேண்டும். மனமும் விழித்திருக்கவேண்டும். புலனும், மனமும் சேர்ந்து பெறுகிற இன்பம் இது. அடுத்தது, மனம் மாத்திரம் அநுபவிக்கின்ற அநுபவம். கனவிலே நுகரும் நுகர்ச்சி அத்தகையது. அப்படியே, கண்ணே மூடிக்கொண்டு குருட்டு யோசனை பண்ணும்போது மனத்தில் உண்டாகிற கவலை, பயம், மகிழ்ச்சி ஆகிய யாவும் உள்ளத்தினுல் மட்டும் அநுபவிக்கும் அநுபவம். இந்த இரண்டு அநுபவங்களிலும் சுகம் துக்கம் என்ற வேறுபாடு இந்த இரண்டுக்கும் அப்பாலே உயிர் அநுபவிக் .கின்ற அநுபவம் உண்டு. அதுதான் ஆனந்தம் என்பது. அந்த அநுபவங்தான் அநுபூதி என்ற பெயராலே பெருமக்களால் சொல்லப்பெறுகிறது. இறைவன் திருவருளால் பெறுகிற ஆனந்தம் சுக மும் அன்று, துக்கமும் அன்று என்று பேசுவார்கள். ஆனந்தம் என்ருலே துக்கம் இருக்கவேண்டுமே என்று நமக்குத் தோன்றும். சுகதுக்கம் ஆகிய இரண்டும் மன எல்லைக்குள் அகப்பட்டவை. ஆன்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/62&oldid=855873" இலிருந்து மீள்விக்கப்பட்டது