பக்கம்:ஞான மாலை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி 43 கோடாக இருக்கிறவன் ஆண்டவன் கந்தன். உமா தேவியார் ஆறு திருவுருவங்களாக இருந்த குழங் தையை வாரி அணைக்க, ஆறு திருமுகங்களுடைய ஒரு குழந்தையாக ஆனதனுல் கந்தன் என்ற பெயர் வந்தது என்று கந்தபுராணம் சொல்கிறது. - சிதறுண்ட பொருள்களை எல்லாம் ஒன்ருக்கும். ஆற்றல் பெற்றவன் கந்தப்பெருமான். நம் உள்ளம் எப்போதும் சிதறுண்டிருக்கிறது. நம்முடைய மனத் தில் தோன்றுகிற பற்று ஏதேனும் ஒன்றிலே அமை வது இல்லை. உலகத்திலுள்ள பொருள்களில் ஆசை வைத்தாலும்கூட ஒன்றையே எப்போதும் ஆசைப் படுவது இல்லை. மனிதமனத்தின்இயல்பே எப்போதும் அலேந்து கொண்டிருப்பது. மனம் வாயுவின் அம்சம். ஒரு நெறியில் மனம் வைத்து உணராதவர்கள் காம். பல நெறியில் சென்று சிதறுண்ட மனத்தை ஒன்றுபடுத்தும் ஆற்றல் கந்தப்பெருமானின் திருவரு ளால் வரவேண்டும். அத்தகைய பெருமான் -ജു,ഞാക്ക് யால் அவனைக் கங்தன் என்று பாராட்டினர்கள் பெரியவர்கள். அது பூ தி அநுபூதி என்பது அநுபவம். இறை அது. பவத்தை அநுபூதி என்று சொல்வார்கள். நாமும் பல வகையான அநுபவங்களைப் பெறுகிருேம். அந்த அநுபவம் மூன்று வகைப்படும். ஓர் அநுபவம் உடம் பும் உள்ளமும் சேர்ந்து பெறும் அநுபவம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அடைகிற அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/61&oldid=855871" இலிருந்து மீள்விக்கப்பட்டது