பக்கம்:ஞான மாலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 கந்தர் அநுபூதி கலி விருத்தங்களால் ஆகியது. திருப் புகழும் திருவகுப்பும் சந்தப் பாக்களால் ஆகியவை. கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி என்பவை கட்டளைக் கலித் துறையால் அமைந்தவை. மயில் விருத்தம் முதலிய மூன் ஆறும் இரட்டையாசிரிய விருத்தங்களால் ஆனவை. இந்த நூல்களில் மிகக் குறைவான சீரால் அமைந்த அடியை யுடைய பாடல்களால் ஆனது கந்தர் அநுபூதி. சுருக்கமான உருவத்தைப் பெற்றிருந்தாலும் பொருளால் திட்பமும் நுட்பமும் உடையது இந்த நூல். - சமயக் கருத்துக்களும் அருணகிரிநாதப் பெருமா லுடைய அநுபவக் கருத்துக்களும் விரவி அமைந்த இக் நூல் எளிதில் மனனம் செய்வதற்கு உரியதாக அமைந்திருக் கிறது. காப்பு ஒன்றும் நூல் ஐம்பத்தொன்றும் ஆக ஐம்பத்திரண்டு பாடல்களால் அமைந்திருக்கிறது. இது. பிற்காலத்தில் யாரோ இதே சந்தத்தில் பாடல்களைப் பாடி அநுபூதியை நூறு பாடல்களாக்கி வைத்திருக்கிருர். அவற்றின் கடையில் அருணகிரியார் வாக்கிலுள்ள செறிவு இன்மையைக் காணலாம். புலமை பழுத்தவர்களின் பாடல்களில் செந்தமிழ்ச் சுவை கன்ருக அமைந்திருக்கும்; சாத்திரக் கருத்துக்களும் விரவி யிருக்கும். பிறருக்கு உபதேசம் செய்யும் பகுதிகளும் இருக்கலாம். ஆல்ை அநுபவ முதிர்ச்சியைக் காட்டும் பகுதி கள் இருப்பதில்லை. மணிவாசகப் பெருமான் திருவாக்கில் அநுபவப் பொங்கலாக வந்த பாடல்கள் பல. சுவையுள்ள விருந்தை உண்டவன் அதை வாயாரப் பாராட்டும் போது, வெறும் சொற்கு வைகள் போதாமல் உணர்ச்சி வசப்படுவான். அவனுடைய பேச்சிலே அது நன்ருகத் தெரியும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/7&oldid=855892" இலிருந்து மீள்விக்கப்பட்டது