பக்கம்:ஞான மாலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 - ஞான மாலே இங்கே பத்து நாள் தங்குவதாக இருக்கிறேன்" என்றுதான் சொல்வான். அப்படிச் சொல்வதைக் கேட்டு, “இந்த மனிதனு இங்கே பத்து நாள் இருக்கப் போகிருன்?’ என்று யாரும் ஐயுறமாட்டார்கள்; ஆட் சேபிக்கமாட்டார்கள். மொழிபெயர்ப்பாளன் கான்' என்பதை நான்' என்றும், நீ என்பதை கீ என்றுமே மொழிபெயர்க்க வேண்டும். இதுதான் முறை. அது போலவே அருணகிரிநாதர் இறைவனுக்கும் நமக்கும் இணைப்பாக கின்று, மொழிபெயர்ப்பாளராக நம் முடைய துன்பங்களே இறைவனுக்கு எடுத்துச் சொல் கிருர். அப்படிச் சொல்லும்போது தன்மையிடத்தைத் தன்மையிடமாகவும், முன்னிலை இடத்தை முன்னிலை இடமாகவும் சொல்கிருர். காம் சொல்ல வேண்டி யதை நாம் சொல்வது போலவே பாடுகிருர். இருவகை அநுபவங்கள் அவருக்கு இரண்டு வகை அநுபவங்களும் உண்டு. கம்மைப் போலத் துன்பங்களைப் பட்டவ ரானமையின் நம்முடைய அநுபவம் அவருக்குத் தெரியும். இறைவனுடைய திருவருளால் இன்பம் பெற்றமையின் இறைவனல் வருகிற ஆன்ம அநுபவமும் அவருக்குத் தெரியும். இரண்டு பேருக் கும் இடையே இணைப்புப்பாலமாக அவர் இருக்கிருர். நம்முடைய அநுபவங்களேத் தம்முடைய அநுபவ மாக ஏறட்டுக்கொண்டு இறைவனிடத்தில் விண்ணப் பித்துக் கொள்கிருர். இறைவனுடைய திருவருளால் தாம் பெற்ற அநுபவங்களே நமக்குச் சொல்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/70&oldid=855894" இலிருந்து மீள்விக்கப்பட்டது