பக்கம்:ஞான மாலை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி 53 இந்த இரண்டு இடங்களிலும் அருணகிரியார் கான்' என்றே சொல்வார். இந்த இரண்டு நானும் ஒரே மாதிரி அமைந்தவை அல்ல. ஒரு நான் உண்மை யான கான். மற்ருென்று நமக்காக மொழிபெயர்த் துச் சொல்கிற கான். தாம் பெற்ற உயர்ந்த அநுபவங்களைச் சொல்லும்போது அவை யாவும் அவருடைய சொந்த அநுபவங்கள் என்று கொள்ள வேண்டும். தாம் இழிந்த கிலேயில் இருப்பதாகச் சொல்கிற பாடல்கள் யாவும் நாம் சொல்ல வேண்டி யவை என்று தெரிந்துகொள்ளவேண்டும். கருணை யினுல் தாம் குறை உடையவராகச் சொல்லி, இறை வனிடத்தில் அருள் பெற்ற பெருமையில்ை தாம் பேரானந்தப் பெருவாழ்வு பெற்றதாகப் பேசுகின்ருர். இரண்டும் ஒருவரிடத்தில் இருக்க முடியாது. இந்த இரண்டிலும் ஏதாவது ஒன்று பொய்யாக இருக்க வேண்டும். இறைவனுடைய திருவருள் அநுபவத்தைக் கற்பனைகொண்டு எண்ண முடியாது. அநுபவித்த வர்களே சொல்ல முடியும். அந்தவகைப் பாடல்களைப் பார்க்கிறபோது அருணகிரியார் சிறந்த அது பூதிமான் என்று தெரிந்துகொள்ளலாம். சிறந்த அது பவியாகிய அவர் இந்தக் குற்றம் செய்தேன் என்று சொன்னுல் அவர் அநுபவித்தது என்று எண்ணக் கூடாது. நம்முடைய குற்றத்தையே அப்படிச் சொல்கிருர். இதுதான் உண்மை. பெருமக்களின் இயல்பு மற்ற மக்கள் செய்கிற குற்றங்களையும், படுகிற பாடுகளையும் தம்முடையனவாகச் .ெ சா ல் வ து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/71&oldid=855896" இலிருந்து மீள்விக்கப்பட்டது