பக்கம்:ஞான மாலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஞான மாலை பெருமக்களுக்கே இயற்கை. இந்த இயற்கையைச் சிறிதும் தடை சொல்லமுடியாத வகையில் தெரிந்து கொள்வதற்குச் சிறந்த உதாரணம் ஒன்று உண்டு. இறைவன் திருவருளால் முறுகிய பக்தி பெற்று, அதல்ை அவனை அன்றி வேறு எந்தப் பொருளிலும் நாட்டம் செல்லாமல் அவனுடைய திரு வருளை ஒருவர் பெற்ருர். சைவ உலகம் எல்லாம் கொண்டாடும் பெருமை உடையவர் அவர். அவர் இறைவனைப் பல படியாகப் பாடியிருக்கிருர், அழகான நூல்களை இயற்றியிருக்கிருர். அவருடைய நூல்களே வ்ேதம் போலப் பாராட்டுகிறது சைவ உலகம். அத்தகையவர் ஒரு பாடல் பாடியிருக்கிருர். தம்முடைய நெஞ்சைப் பார்த்து மிக்க வருத்தத் துடன்சொல்கிருர், “ஏ மட கெஞ்சமே! நீ இறைவனே கினையாமல் இருக்கிருயே! உலகத்திலுள்ள இன்பத் தைப் பெரிதாக எண்ணித் தவிக்கிருயே!” என்ற கருத்தோடு பாடத் தொடங்குகிருர். கங்கையாறு புக்கிருந்தும் நனயாத சடை முடியையுடைய சிவ பெருமானும், நம்முடைய தந்தையுமாகிய ஆண்ட வன் விறகிட்டுத் தூண்டாத சிவந்த தீயைப் போல இருக்கிருன். அவன் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். சர்வாண்டங்களையும் தன் இருப்பிடமாகக் கொண்டவன். அவன் பாதாரவிந்தங்களை கினையா மல் நாட்களைக் கழிக்கின்ருயே! பாழும் கெஞ்சமே! இந்த உலகத்தில் மனைவியையும், மக்களையும் நமக் குத் துணே என்று நம்பி அவர்களே தஞ்சம் என்று பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்நாளை வீணுகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/72&oldid=855898" இலிருந்து மீள்விக்கப்பட்டது