பக்கம்:ஞான மாலை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி 5) கழிக்கின்ருயே!” என்று அவர் வருந்துகிருர், அவர் பாடிய பாடலைச் சொல்கிறேன். "கினேயா தொழிதிகண் டாய்நெஞ்ச மேஇங்கோர் தஞ்சமென்று மனையா ளயும்மக்கள் தம்மையும் தேறியோர் ஆறுபுக்கு கணையாச் சடைமுடி கம்பன்நம் தாதைகொங் தாதசெந்தீ அனையான் அமரர் பிரான் அண்ட வாணன் அடித்தலமே." இந்தப் பாட்டைப் பார்த்தால் இதைப் பாடியவர் எத்தகையவர் என்று கொள்ளலாம்? நவீன ஆராய்ச் சிக்காரர்களிடத்தில் இந்தப் பாட்டைக் கொடுத்தால், 'இதைப் பாடினவருக்கு மனேவியும், மக்களும் இருக் திருக்க வேண்டும்; அவர்களால் துன்பமுற்று இப்படிப் பாடினர்' என்று சொல்வார்கள். இந்தப் பாட்டைப் பாடியவர் ஆண்பாலே அல்லர். இறை வனுடைய திருவருளைப் பெற்று எல்லோராலும் போற்றப் பெறுகின்ற நிலையில் சைவ உலகத்தின் மதிப்புக்குரியவராக விளங் கு ம் காரைக்கால் அம்மையாரே இதைப் பாடியிருக்கிருர். அம்மைக்கு மக்கள் உண்டா இல்லையா என்பதைப் பற்றிக்கட்ட ஆராய வேண்டாம். நிச்சயமாக மனைவி இருக்க முடியாது. பெண்பாலுக்கு மனைவி எங்கே இருக்க முடியும்? இருந்தும், மனயாளயும் மக்கள் தம்மையும் தேறி” என்று சொல்கிருர்; அது உலகத் திலுள்ள மக்களை நினைந்து சொன்னது. தம்முடைய கெஞ்சைப் பார்த்துத் தம்மையே இந்த நிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/73&oldid=855900" இலிருந்து மீள்விக்கப்பட்டது