பக்கம்:ஞான மாலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் 59. யாகத் தஞ்சம் என்று வருவோருக்கு அருள் கூரும் ஆறுமுகக் கடவுளுடைய பாதத்திற்குச் செம்மையான சொற்களால் அமைந்த அலங்காரமான மாலையை அணிவதற்கு ஐந்து கரத்தினை உடைய விநாயகக் கடவுளுடைய பாதத்தை வணங்குவோம்” என்பது. இந்தப் பாட்டில் ஐந்து பகுதிகள் இருக்கின்றன. ஐந்து பகுதிகள் முதல் பகுதி கெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக”; இரண்டாவது பகுதி "தஞ்சத்து அருள் சண்முகனுக்கு"; மூன்ருவது பகுதி 'இயல்சேர் செஞ்: சொற் புனைமாலை”, நான்காவது பகுதி "சிறந்திடவே'; ஐந்தாவது பகுதி 'பஞ்சக் கர ஆனபதம் பணிவாம்.” இந்தப் பகுதிகளில் ஒவ்வொன்றும் மிகவும் நுட்பமான பொருள்களே உடையவை; சற்றே விரிவாகச் சிந்தித். துப் பார்க்க வேண்டியவை, பய ன் ஏதேனும் ஒரு நூல் செய்தால் பெரியவர்கள் அந்த நூலால் இன்ன பயன் உண்டாகும் என்று. சொல்வது வழக்கம். தேவாரத்தில் திருஞான சம்பக் தப் பெருமானும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும் ஒவ்: வொரு பதிகத்தின் இறுதியிலும் திருக்கடைக் காப்புப் பாடியிருக்கிருர்கள். அதில், இந்தப் பதிகத் தைப் பாடுவாருக்கு இன்ன பயன் உண்டாகும்’ என்று சொல்வார்கள். வடமொழியில் இதைப் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/77&oldid=855908" இலிருந்து மீள்விக்கப்பட்டது