பக்கம்:ஞான மாலை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஞான மாலை சுருதி என்று சொல்வது வழக்கம். வடமொழி நூல் களில் இந்த மரபைக் காணலாம். பெரிய காப்பியங் களில் இறுதியில் பயனைச் சொல்வது பெரும்பாலும் வழக்கம். முதலிலும் சொல்வது உண்டு. இங்கே அருணகிரிநாதப் பெருமான் எடுத்த வுடனேயே கந்தர் அநுபூதிப் பாடலின் பயனைச் சொல்கிருர். கெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருக என்பது நூலினுல் உண்டாகும் பயன். இந்தப் பாட்டில் முருகப்பெருமானே முதலில் கினைக்கலாம்; அல்லது விநாயகர் வணக்கம் ஆதலால் கணபதியை முதலில் நினைக்கலாம். எடுத்தவுடனே பயனைச் சொல்கிருர் அருணகிரியார். காரணம் என்ன? இறைவன் திருவருளால் அநுபூதி பெற்ற அருண கிரிகாதப் பெருமான் முருகன் புகழை விரிவாகச் சொல்லி முடிக்க வேண்டுமென்ற நோக்கத்தை முக்கியமாகக் கொண்டு இதைப் பாடவில்லை. அது பூதி பெற்ற பெரியவர் தாம் என்பதை உலகத் தாருக்கு வெளிப்படுத்துவதற்காகவும் பாடவில்லை. அவரது கோக்கம், தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறவேண்டும் என்பதே. ஆகவே, கந்தர் அநுபூதி பாடுவதற்கு முக்கியமான காரணம் மற்ற ஆருயிர் களிடத்தில் அருணகிரிநாதப் பெருமானுக்கு உள்ள கருணை. உலகத்திலுள்ள மக்கள் அநுபூதியைப் படித்து முருகப்பெருமானின் திருவருளேப் பெற வேண்டுமென்பதே அவருடைய நோக்கம். அதுதான் இந்த நூலுக்குப் பயன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/78&oldid=855910" இலிருந்து மீள்விக்கப்பட்டது