பக்கம்:ஞான மாலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் 63 செய்து வருகிருர்கள். ஆதலால் பிறவியைக் கடந்து இறைவன் திருவருளேப் பெறுவதற்குரிய வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போகிறது. ஆணுலும் இந்தப் பிறவியைப் பெற்ற சிலர் இறை வன் திருவருளேப் பெறுகிருர்கள். அவர்களுக்கும் நம்மைப்போல உடம்பு இருந்தாலும் இந்த உடம் பிஞலே அவர்கள் துன்பப்படாமல் இந்த உடம்பைக் கொண்டே இறைவனிடத்தில் பக்தி செய்து அவன் திருவருளேப் பெறுகிருர்கள். மூன்று வகை மக்கள் பிறவி என்னும் பெரிய கடலில் மூன்று வகை மக்கள் இருக்கிருர்கள். ஒரு சாரார் கப்பலில் இருப்ப வர்கள். மிகமிக விரிந்த கப்பலில் செல்கின்ற செல் வர்கள், அங்கே எல்லா வகையான இன்பங்களையும் பெறுகிருர்கள். காலையில் எழுந்தால் பல் தேய்த்து விட்டு, பின்பு காபி அருந்தி, ரேடியோவைத் திருப்பி அன்ருடச் செய்திகளை எல்லாம் கேட்கிருர்கள். பெரிய கப்பல் ஆகையால் அங்கே அச்சகம் கிறுவிக் கப்பல்காரர்கள் ஒரு சிறிய பத்திரிகையை வெளி யிடுகிருர்கள். அந்தச் செய்திப் பத்திரிகையைப் படிக்கிருர்கள். நண்பர்களுடன் பேசி இருந்துவிட்டு ஒன்பதுமணிக்கு வெங்கீராடி,பத்துமணிக்கு அறுசுவை உண்டிகொள்கிருர்கள். பின்பு இளைப்பாறி மறுபடியும். எழுந்து சதுரங்கம் முதலிய விளையாடல்களை விளையாடுகிருர்கள். அதற்குப் பி ற கு சிற்றுண்டி நுகர்ந்து கப்பலுக்குள் அமைந்திருக்கிற பந்தடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/81&oldid=855917" இலிருந்து மீள்விக்கப்பட்டது