பக்கம்:ஞான மாலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஞான மாலே மேடையில் பங்து விளையாடுகிருர்கள். மாலை நேரத்தில் சிறந்த சங்கீதக் கச்சேரி கேட்கிருர்கள். இரவு உண்ட பின்பு நன்ருகத் தூங்குகிருர்கள். அவர் களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் ஆழம் காணுத கடலில் இருப்பதாகத் தோன்றவில்லை. கரையில் இருப்பவர்கள் எப்படி எப்படி வாழ்கிருர்களோ, எந்த வித இன்பங்களைப் பெறுகிருர்களோ அப்படியே கடலில் பெரிய கப்பலில் ஏறிக்கொண்டு போகிறவர் கள் இருக்கிருர்கள். அவர்கள் செல்வர்கள்; அவர் கள் ஏறிய கப்பல் மிகச் சிறந்த கப்பல். மற்ருெரு சாராரோ கடலின் மேலே மிதக் கிருர்கள். எந்தச் சமயத்தில் ஒடமோ, தோணியோ, கப்பலோ வந்தாலும் அதில் ஏறிக்கொள்ளத் தயாராக இருக்கிருர்கள். கைப் பலத்தினுல் நீந்திக்கொண் டிருக்கிற போது எந்த ஓடக்காரன் வந்தாலும் அவர் களே ஏற்றிக்கொள்வான். கடலின் மேலே மிதக்கிற அவர்கள் பின்னே கப்பலில் ஏறி இன்பத்தை அநுபவிக்கக்கட்டிய கிலேயில் இருக்கிருர்கள். கப்பலில் இருப்பவர்கள் மிகச் சிலர், கடலின் மேலே மிதக்கிறவர்கள் சிலர்; ஆனல் பெரும்பாலோர் கடலுக்குள் ஆழ்ந்து கொண்டிருக்கிருர்கள். வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளில் கப்பலில் உள்ளவர்கள் பிரயாணம் செய்யவும், மேலே மிதக் கிறவர்கள் நீந்தவும், கடலுக்குள் ஆழ்கிறவர்களுக்கோ இந்தத் திசை வேறுபாடே இல்லை. எல்லோரும் உள்ளே ஆழ்கிருர்கள். அவர்கள் பயணம் அதோ கதியான பயணம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/82&oldid=855918" இலிருந்து மீள்விக்கப்பட்டது