பக்கம்:ஞான மாலை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெஞ்சக் கன கல் 65 கடலின் மேலே ஆயிரம் ஆயிரம் ஓடங்களும், தோணி களும், கப்பல்களும் இருந்தாலும் அவை யெல்லாம் மிதக்கிறவர்களுக்குப் பயன்படுமே அல் லாது, கடலில் ஆழ்கிறவர்களுக்குப் பயன்படுவது இல்லை. ஒடத்தின் மேலே இருக்கிறவர்கள் கடலுக் குள் ஆழ்கிறவர்களைக் காப்பாற்றவேண்டுமென்று ஆசைப்பட்டாலும், அவர்கள் மேலே வந்து மிதந்தால் தான் உடனேயே தூக்கிப் போட்டுக்கொள்ளமுடியும். கடலுக்குக் கீழே போனவனுக்கு ஒடமும் பயன் இல்லை; தோணியும் பயன்இல்லை. ஒடமும்,தோணியும் கடலுக் குக் கீழே போனுலும் அவை ஒடமும் ஆகா, தோணி யும் ஆகா. இப்படிக் கப்பலில் ஏறிக்கொண்டவர்கள், கடலில் மிதக்கிறவர்கள், கடலில் ஆழ்கிறவர்கள் என்று மூன்று வகையினரைப் பார்த்தோம். முததரும் பகதரும பிறவிப் பெருங் கடலிலும் மூன்று வகை யினர்கள் இருக்கிருர்கள். இறைவனுடைய திரு வருளால் இந்த உடம்பில் இருக்கும்போது முத்தி இன்பத்தைப் பெறுகிறவர்கள் கப்பலில் போகிறவர் கள். அவர்களே ஜீவன் முத்தர்கள் என்றும் சகஜ கிஷ்டர்கள் என்றும் பெரியவர்கள் சொல்வார் கள். அவர்களுக்கு இந்த உடம்பு இருக்கிறது என்ற கிஜனவு கூட இராது. முத்தி இன்பம் எத்தகையதோ அதே இன்பத்தை இந்த உடம்பில் இருந்துகொண்டே அநுபவிப்பார்கள். பிராரப்த வினை காரணமாக இந்த உடம்பில் இருக்கிருர்களாதலின் அவர்களிடத்தில் G5, 5 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/83&oldid=855919" இலிருந்து மீள்விக்கப்பட்டது