பக்கம்:ஞான மாலை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் 69 ஒட்டிக்கொண்டு வருகிற கல்லாகிய மனம் பிறவி தோறும் தொடர்ந்து வருவது. இந்தச் சரீரம் ஒரு பிறவியோடு போய்விடும். ஆலுைம் இதன் உள்ளே இருக்கிற சூட்சும சரீரமாகிய நுண் உடல் எப்போதும் தொடர்ந்து வரும். அந்த நுண் உடலின் முக்கியமான பகுதியே மனம். இந்தப் பிறவியிலே அடைகின்ற அநுபவங்களும் பிறவும் மனத்தில் வாசனையாக அமைகின்றன. * குழந்தைகள் கந்தவனத்திற்குச் சென்று ஓர் ஆடையில் மலர்களைப் பறித்துப் போட்டுக் கொள் கிருர்கள். பின்பு அவற்றைக் கொண்டு போய் வீட் டில் கொட்டிவிடுகிருர்கள். சில நேரம் மலர் இருந்த ஆடையில் வாசனை தங்கி இருக்கும். அதுபோலவே பிறவியில் ஆழ்ந்து வருகிற உயிர்களுக்கு அநுபவங் கள் மனத்தில் அமைகின்றன. அவற்றின் புற உரு அல்லது விவரங்கள் மறு பிறவியில் தெளிவாகத் தெரியாவிட்டாலும் அவற்றின் சாரமான வாசனை மனத்தில் இருக்கும். அதனுல்தான் சிலர் பிறக்கும் போதே நல்ல சாமர்த்தியசாலியாகப் பிறக்கிருர்கள். சிலர் கோபம் உடையவர்களாக இருக்கிருர்கள். சிலருக்கு இயற்கையாகப் பொருமை மிகுந்து வரு கிறது. இவை எல்லாம் வாசனைகள். பல பிறவி களில் வாசனைகள் படலம் படலமாக மனத்தில் ஏறி வருகின்றன. இந்த மனத்தை எப்படிப் போக்குவது? அதுதான் எல்லாச் சமயங்களும் ஆராய்கின்ற ஆராய்ச்சி. மனத்தை அடக்கி ஞானம் பெறலாம் என்பது இந்தக் காலத்தில் முடிவது அன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/87&oldid=855923" இலிருந்து மீள்விக்கப்பட்டது