பக்கம்:ஞான மாலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் 73 கல்லாக இருப்பது உடனே நீராக உரு காது. முதலில் இளகிப் பின்புதான் உருகும். இளகு வதை நெகிழ்தல் என்று சொல்வார்கள். நெகிழ்தலுக் குப் பிறகு உருகுதல் ஏற்படும். கெஞ்சக் கன கல் முத லில் நெகிழ்ந்து பிறகு நீராளமாக உருகினல் கல்லி ல்ை உண்டாகின்ற கணம் குறைந்து, இதுவரைக்கும் பெத்தர்களாக இருந்தவர்கள் பிறவிப் பெருங் கடலின் மேலே மிதக்கும் பக்தர்களாகி விடுவார்கள். அவர் களுக்கு இறைவனது அருள் தோணியில் ஏறிக் கொள்ளும் செவ்வி கிடைக்கும்; சரியான பக்குவத் தில் இறைவன் அவர்களேத் தன் கருணைத் தோணி யில் ஏற்றுக் கொள்வான். அப்பால் அவர்கள் முத்தர் களாகிவிடுவார்கள். பெத்தர் பக்தராகிப் பின்பு முத்தர் ஆகவேண்டும். இதற்கு முதலில் பெத்தர் பக்தராக வேண்டும். - நெகிழ்தலும் உருகுதலும் நெகிழ்தலும், உருகுதலும் இரண்டு வேறு செயல்கள். நம் துன்பத்தை கினேந்து முதலில் நெகிழ்ந்து, அப்பால் இறைவனுடைய கருணையையும் அதல்ை வரும் அநுபவத்தையும் கினேந்து உருக வேண்டும். நெகிழ்வதற்கு மூலகாரணம் இந்தப் பிறவி யில்ை அடையும் துன்பங்கள். - நாம் ஒவ்வொரு நாளும் துன்பப்பட்டுக்கொண் டிருக்கிருேம். உண்மையில் மனிதப் பிறவி இன்பமும் துன்பமும் கலந்த பிறவியே. முழு இன்பத்தை அது பவிக்கும் பிறவி தேவப் பிறவி. புண்ணியத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/91&oldid=855928" இலிருந்து மீள்விக்கப்பட்டது