பக்கம்:ஞான மாலை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. ஞான மாலே கொண்டிருக்கிறது. அது நம்முடைய முயற்சியா? அது இடைவிடாமல் ஓடிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன என்று சற்றேனும் யோசித்தோமா? அற்புதங்கள் "ஞானசம்பந்தர் செய்த அற்புதங்களைப் போல இப்போது ஒன்றும் நிகழவில்லை. நிகழ்ந்தால் அல்லவா உருகலாம்?”என்று சிலர் கேட்கிருர்கள். அற்புதங்கள் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆளுல் அவற்றைக் காணும் கண்தான் நமக்கு இருப்பது இல்லை. விதையும், மண்ணும், தண்ணிரும் சேர்ந்து மரம் ஆகின்றனவே! அதைக் காட்டிலும் அற்புதம் ஒன்று உண்டா? வானுலகத்துக் கோள்களை எல்லாம் கண்டு, புதிய புதிய விண் மீன்களைத் தெரிந்து, சந்திரமண்டலத்திற்குச் செல்லும் கருவிகளை 2-6ঠো டாக்கி, விஞ்ஞானிகள் அற்புதமான சாதனைகள் செய் கிருர்கள். மிகவும் தொலைவில் உள்ள பொருள்களைக் காண்பதற்கும் நுட்பமான பொருள்களைக் காண்பதற் கும் பலவகை ஆடிகளைக் கண்டு பிடித்திருக்கிருர்கள். ஐம்பெரும் பூதங்களையும் மனித ஆற்றலுக்குள் அடக்கிப் பலவகையான செயல்களைச் செய்ய வழி வகுத்திருக்கிருர்கள். தாமே இயங்கும் வண்டிகள், வானத்தில் பறக்கும் விமானங்கள், கடலுக்குள் மூழ்கிச் செல்லும் கப்பல்கள் ஆகிய பல, விஞ்ஞானி களின் அற்புத சாதனைகளாக உலகத்தில் மிக அதிச யமாக நடமாடுகின்றன. ரேடியோ, டெலிவிஷன் வந்துவிட்டன. இவை யாவும் மனிதனுடைய அற்புத சக்திக்கு அடையாளங்களாக நிலவுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/98&oldid=855935" இலிருந்து மீள்விக்கப்பட்டது