பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

29


பதவிகளில் தமிழர்க்குப் பங்கு வேண்டும் படிப்பினிலும் அப்படியே உரிமை வேண்டும் புதுவுலகில் பிற்பட்டோர் வாடல் நன்றோ? பொதுமைநிலை சரிசமங்கள் அவர்க்கும் வேண்டும் இதுதகுதி இதுதிறமை என்று பேசி ஏய்ப்பவரை எதிர்த்துப்போ ராடி நின்றார் புதுநிலைமை வளர்பொழுதில் ஆள்வோர் மீண்டும் புகுத்துகிறார் தகுதிதிறம் வெட்கம் வெட்கம். வேதங்கள் புராணங்கள் இதிகா சங்கள் வேண்டாத சட்டங்கள் இவைகள் எல்லாம் தீதுங்கள் வாழ்வுக்கென் றெடுத்து ரைத்துத் தெளிவித்தார் அவற்றைஎலாம் தீயி லிட்டார் வாதங்கள் பலபுரிந்தார் வெற்றி கண்டார் வளரறிவுச் சுடரொளியைத் துாண்டி விட்டார் பேதங்கள் பேதமைகள் தொலைப்ப தற்குப் பெரும்போர்கள் நடத்திநமைக் காத்த வீரர். புலவர்தமைப் பொய்ந்நூலைச் சாடி னாலும் புலவரெலாம் இவர்பக்கம் பிளவு பொய்ம்மை மலிசமயக் கொள்கைகளை எதிர்த்த போதும் மதத்தலைவர் இவர்பக்கம் கடவுட் பொம்மை கலகலக்க உடைத்தெறிந்த போதும் அந்தக் கடவுளறும் இவர்பக்கம். ஆரி யத்தை அலறவைக்கப் போர்தொடுத்து நின்ற போதும் ஆச்சாரி யாருமிவர் நண்பர் ஆனார். சமயத்தின் பொய்ம்மைஎலாம் தொகுத்து வைத்துச் சமுதாயச் சீர்கேட்டைச் சிந்தித் தாய்ந்தே இமயத்தின் மேல்நின்று மக்கள் முன்னர் எடுத்துரைத்த வாதங்கள் கொள்கை எல்லாம் உமியொத்த மனத்தவரைத் தவிர மற்றோர் உண்மைஎனத் தெளிந்ததனால் பகைமை யின்றித் தமையொத்த அய்யாவின் பக்கம் நின்றார் தந்நலத்தை நாடாத அய்யா வென்றார்.