பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஞாயிறும் திங்களும்



வெண்தாடி வேந்தர்


வெண்தாடி வேந்தரைப் பாரீர் - செய்த

விந்தைகள் யாவையும் பாடுவம் வாரீர்
- வெண்தாடி

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகக்

காலமெல் லாம்உழைத்து மேனியெல்லாம் பழுத்த
- வெண்தாடி

பண்ணுயர் தமிழும் பாங்குயர் இனமும்
பாரினில் மேம்படப் போர்பல தொடுத்தார்
கண்ணொளி குறைந்தும் கால்நடை தளர்ந்தும்

கலங்காமல் தன்னலங் கருதாமல் உழைத்தார்
- வெண்தாடி

செந்தழல் மேனி சிந்தனை ஞானி
சிங்கம்போல் முழக்கம் சீரிய பழக்கம்
வெந்துயர் தாக்கினும் வீணர்கள் தூற்றினும்

வெஞ்சிறை யேகினும் அஞ்சில ராகிய
- வெண்தாடி

சிக்கனக் காரர் செலவிட ஒவ்வார்
சேர்த்தவை எல்லாம் யார்க்கெனத் தந்தார்?
மக்களுக்கு கென்றே மனத்தினிற் கொண்டார்

தொகுத்தார் வகுத்தார் கொடுத்தார் அந்த
- வெண்தாடி

பகலிலும் இரவிலும் பயணம் செய்வார்
பனிமழை பாரார் பசியெனச் சோரார்
இகலது சாய இழிவுகள் மாய

எதிர்ப்பார் அறப்போர் தொடுப்பார் அந்த
- வெண்தாடி

ஆதர வின்றி அண்டிய பிள்ளை
அத்தனைப் பேருக்கும் அவர்தாம் தந்தை
ஓதிய கொள்கை மோதுதல் அன்றி

ஒருதனி மனிதரைப் பகைத்ததும் இல்லை
- வெண்தாடி

தண்டின் துணையால் தளர்நடை நடந்தும்
தரைதனில் நடந்திட இயலா திருந்தும்
தொண்டின் பணியில் துவளா திருந்தார்

தொழுவோம் அவர்பணி தொடர்வோம் எங்கள்
- வெண்தாடி
21-6-1979