பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஞாயிறும் திங்களும்



காஞ்சிக் கதிரவன்


அடிமைஎனும் இருளகற்ற வந்த காஞ்சி
       அறிஞனொரு செம்பரிதி, உரிமை பூத்துப்
படிவளரத் தமிழ்மாரி பொழியும் வானம்,
       பரவிவரும் தம்பியராம் உடுக்க ணங்கள்
தொடருமொரு முழுத்திங்ள், மூடச் செய்கை
       தூரோடு சாய்ந்துவிழக் கடிது வீசிப்
படருமொரு புயற்காற்று, வறியர் வாழ்வில்
       படர்துடைத்து நலம்பயக்குந் தென்றற் காற்று

குற்றால மலைமுகடும் நாணும் வண்ணம்
       கொட்டுகிற சொல்லருவி, எங்கள் அண்ணா
வற்றாத கலையூற்று, கோலார் போல
       வளமான சிந்தனைகள் நிறைசு ரங்கம்,
கற்றோரின் நூல்களெல்லாம் தேக்கி வைத்துக்
       காக்கின்ற அணைக்கட்டு, முகில்ப டர்ந்து
பற்றாத முழுமதிசேர் நீல வானம்,
       பண்பாறு பாய்கின்ற கடலும் ஆவான்.

திருவெண்காட் டின்னிசையும், சொக்க வைக்கும்
       சீர்த்திருவா வடுதுறையின் மிடுக்குஞ் சேர்ந்தே
உருவங்காட் டுங்காரு குறிச்சி மன்னன்
       ஊதிவந்த நாதசுரம்; மதங்கொண்டோடும்