பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

53


| தமிழ்நாட்டுப் பேரரண் | அறிவுடைய மாந்தரெலாம் அறிஞர் ஆகார் அளப்பிலநூல் பயின்றவரும் அறிஞர் ஆகார் நெறியொழுகி, அருள்சுரந்து, மக்கட் பண்பு நிறைந்திருந்து, பிறர்துயரம் துடைத்து, நல்ல குறியுடைய வாழ்வுநெறி மலரத் தம்மைக் கொடுப்பவரே அறிஞராவர், அனைத்துங் கூடி அறிஞரெனும் சொல்லுக்கே உரிய ரானார் அண்ணாஎன் றழைப்பதற்கும் உரிய ரானார். குறளுக்கும் மூன்றெழுத்தே அண்ணா என்னும் குளிர்மொழிக்கும் மூன்றெழுத்தே உலகம் போற்றும் குறள்வகுக்கும் பால்மூன்றே அண்ணா சொன்ன கோட்பாடும் ஒருமூன்றே நுவலும் பாட்டின் உருவுக்கும் பேர்குறளே அண்ணா கொண்ட உருவமதும் குறளேயாம், அதனால் அண்ணா குறளுக்கு நிகராவார், மேலும் வாழ்வு கூறுகிற குறளுக்குப் பொருளும் ஆவார். பாவேந்தன் பாட்டுக்கோர் அரணாய் நின்றார் பைந்தமிழ்ப்பண் பாட்டுக்கும் அரணாய் நின்றார் நாவேந்தர் கோவேந்தர் கூடிக் காத்த நாட்டுக்கும் அரணானார் நமது நெஞ்சப் பூவேந்தும் நம்அண்ணா தமிழ்மொ ழிக்குப் பொலிவுதரும் அரணானார் தமிழி னத்தார் தாழ்வேந்திப் போகாமல் காத்து நிற்கும் சரித்திரத்தின் பேரரணாய் விளங்கு கின்றார். தனித்தனியே பிரிந்தவர்க்கும் கூடு நர்க்கும் தலைமகனாம் இம்மன்னன் காத லூட்டிக் கணிச்சுவையை விஞ்சுதமிழ் அமுதம் பெய்து களிப்பூட்டும் நிறைமதியன் ஆவான் கண்டீர் அனிச்சமலர் மென்மையினை மனத்திற் கொண்ட அம்மதியை *ஓரிரவிர் கண்டாற் போதும் தனிச்சுவடு பதித்தமையை உணர்ந்து கொள்வர் தமதுள்ளம் உடலுயிர்கள் உருகி நிற்பர்.

  • ஒரிரவு - அவரெழுதிய நாடகம்